கொவிட் 19: ரூ.50 லட்சம் நிதி வழங்க கௌதம் காம்பீர் உறுதி

கொவிட் 19: ரூ.50 லட்சம் நிதி வழங்க கௌதம் காம்பீர் உறுதி

1 mins read
a37fcc4b-14f9-4b4a-8797-35cc676463a1
கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கான உப­க­ர­ணங்­கள் வாங்க டெல்லி அர­சுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிதி­யில் இருந்து 50 லட்­சம் ரூபாயை ஒதுக்­கத் தயா­ராக இருப்­ப­தாக முன்­னாள் கிரிக்­கெட் வீர­ரும் இப்­போ­தைய பாஜக எம்.பி.யுமான கௌதம் காம்பீர் உறு­தி­ய­ளித்­துள்­ளார். கோப்புப்படம் -

புதுடெல்லி: இந்­தியா முழு­வ­தும் கொரோனா கிருமி அச்­சு­றுத்­த­லால்­ டெல்­லி­யில் உச்­சக்­கட்ட முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது. முத­ல­மைச்­சர் கெஜ்­ரி­வால் ஊட­ரங்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார்.

ஏழை மக்­க­ளுக்கு ரே‌ஷன் பொருட்­கள் உள்­பட வழங்க ஆணை­யிட்­டுள்­ளார்.

கொரோனா கிரு­மித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தால் சிகிச்சை அளிப்­ப­தற்­கான உப­க­ர­ணங்­க­ளுக்குத் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுமோ என்ற அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது.

அப்­படி ஏற்­பட்­டால் உப­க­ர­ணங்­கள் வாங்க டெல்லி அர­சுக்கு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிதி­யில் இருந்து 50 லட்­சம் ரூபாயை ஒதுக்­கத் தயா­ராக இருப்­ப­தாக முன்­னாள் கிரிக்­கெட் வீர­ரும் இப்­போ­தைய பாஜக எம்.பி.யுமான கௌதம் காம்பீர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

டெல்லி முதல்­வர் கெஜ்­ரி­வா­லுக்கு கௌதம் காம்பீர் எழு­திய கடி­தத்­தில், ''கொரோனோ கிரு­மித் தொற்­றில் இருந்து மக்­க­ளை­யும் நக­ரத்­தை­யும் காப்­பாற்ற நாம் ஒன்­றி­ணைந்து முன்­னேற்­பா­டு­க­ளைச் செய்ய வேண்­டும். சிகிச்­சைக்­கான உப­க­ர­ணங்­கள் வாங்­க­வேண்­டிய தேவை ஏற்­பட்­டால் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிவா­ரண நிதி­யில் இருந்து 50 லட்­சம் ரூபாய் ஒதுக்­கத் தயா­ராக இருக்­கி­றேன்,'' என்று தெரி­வித்­துள்­ளார்.

மேலும், தேவை­க­ளைப் பற்றி எனது அலு­வ­ல­கத்­திற்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்குப் பொறுப்­பான அதி­கா­ரி­க­ளைத் தய­வு­செய்து அமர்த்­துங்­கள் என்­றும், என்­னால் மற்ற உத­வி­களும் செய்ய முடி­யும்," என்­றும் தெரி­வித்­துள்­ளார்.