பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கம்

பட்டியலில் இருந்து ஸ்டெயின் நீக்கம்

1 mins read
0480b96f-b449-45bb-ae94-2cff3e896d01
தென்­னாப்­பி­ரிக்க கிரிக்­கெட் வாரி­யம் 2020-21ஆம் ஆண்­டுக்­கான வீரர்­க­ளின் தேசிய ஒப்­பந்தப் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது. இதில் ஒரு­நாள் மற்­றும் 20 ஓவர் கிரிக்­கெட் போட்­டி­களில் மட்­டும் விளை­யாடி வரும் மூத்த வேகப்­பந்து வீச்­சா­ளர் ஸ்டெ­யின் கழற்றிவிடப்­பட்­டுள்­ளார். கோப்புப்படம் -

கேப்­ட­வுன்: தென்­னாப்­பி­ரிக்க கிரிக்­கெட் வாரி­யம் 2020-21ஆம் ஆண்­டுக்­கான வீரர்­க­ளின் தேசிய ஒப்­பந்தப் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

இதில் டெஸ்ட் கிரிக்­கெட்­டில் இருந்து ஓய்­வு­பெற்று இப்போது ஒரு­நாள் மற்­றும் 20 ஓவர் கிரிக்­கெட் போட்­டி­களில் மட்­டும் விளை­யாடி வரும் மூத்த வேகப்­பந்து வீச்­சா­ளர் ஸ்டெ­யின் கழற்றிவிடப்­பட்­டுள்­ளார்.

இடதுகை வேகப்­பந்து வீச்­சா­ளர் பீரன் ஹென்­ரிக்ஸ் பட்­டி­ய­லில் புதிதாகச் சேர்க்­கப்­பட்டு இருக்­கி­றார்.

டெஸ்ட் மற்­றும் 20 ஓவர் அணித் தலை­வர் பொறுப்பை துறந்த பாப் டுபிளிஸ்­சிஸ் தொடர்ந்து மூன்று வடி­வி­லான போட்­டி­க­ளி­லும் ஆடு­வ­தால் ஒப்­பந்­தத்­தில் நீடிக்­கி­றார்.

அணித்­த­லை­வர் குவின்­டான் டி காக், பவுமா, டேவிட் மில்­லர், வான்­டெர் துஸ்­சென், டீன் எல்­கர், கேஷவ் மக­ராஜ், ரபடா, நிகிடி உள்­பட 16 பேர் ஒப்­பந்தப் பட்­டி­ய­லில் உள்­ள­னர்.