ஒலிம்பிக் விளையாட்டுக்கு நீடித்த விளம்பர ஆதரவு

தோக்கியோ: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­கள் தள்­ளிப்­போ­டப்­பட்­டுள்ள நிலை­யில், அனைத்­து­லக ஒலிம்­பிக் குழு­வுக்கு அளித்­து­வ­ரும் ஆத­ரவு தொட­ரும் என முக்­கிய விளம்­பர நிறு­வ­னங்­கள் உறுதி கூறி­யுள்­ளன.

இது குறித்து கருத்­து­ரைக்­கும் நிபு­ணர்­கள் இந்த விளை­யாட்டு போட்­டி­க­ளுக்­காக விளம்­பர நிறு­வ­னங்­கள் வழங்­கி­யுள்ள பில்­லி­யன் கணக்­கான தொகையை அந்­நி­று­வ­னங்­கள் திருப்­பிக் கேட்­கும் சாத்­தி­ய­மில்லை என்று கூறு­கின்­ற­னர்.

ஒலிம்­பிக் போட்­டிக­ளுக்­காக கொக்கோ கோலா, புராக்­டர் அண்ட் கேம்­பல், இன்ெடல் கார்ப் போன்ற 14 நிறு­வ­னங்­கள் ஏற்­கெ­னவே அமெ­ரிக்க டாலர் 500 மில்­லி­யனை இவ்­வாண்டு செல­வ­ழித்­துள்­ள­தா­க­வும் இவை மேலும் 14 பில்­லி­யன் டாலர்­பெறு­மா­ன­முள்ள ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­திட்­டுள்­ள­தா­க­வும் குளோ­பல் டேட்டா என்ற ஆய்வு நிறு­வ­னம் கூறு­கிறது.

உல­கில் வேக­மாக பர­வி­வ­ரும் கொரோனா கொள்ளை நோயால் இவ்­வாண்டு நடை­பெ­று­வ­தாக இருந்த ஒலிம்­பிக் போட்­டி­கள் அடுத்த ஆண்­டுக்கு ஒத்­திப் போட்­டுள்­ள­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று அறி­விக்­கப்­பட்­டது.

இது இந்­தப் போட்டி விளை­யாட்­டு­கள் நடை­பெற்று வந்­துள்ள 124 ஆண்­டு­களில் முதன்­மு­த­லாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த அறி­விப்பு வெளி­யான பின்­னர் புரோக்­டர் அண்ட் கேம்­பல், இன்­டெல், கொக்கோ கோலா, ஏர்­பி­என்பி போன்ற நிறு­வ­னங்­கள் ஒலிம்­பிக் போட்­டிக­ளுக்­கான தங்­கள் கடப்­பாட்டை மறு­உ­று­தி­செய்­துள்ளன.

ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­கள் தள்­ளிப்போடப்­பட்ட பிரச்­சி­னை­யில் தாங்­கள் ஆக்­க­க­ர­மான தீர்­வு­க­ளைக் காண்­போம் என்று பிரிட்ஜ்ஸ்­டோன் நிறு­வ­னம் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

“ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்டி­களுக்கு நீண்­ட­கா­ல­மாக ஆத­ர­வ­ளித்து வந்­துள்ள எங்­கள் நிறு­வ­னம் இந்­தப் பிரச்­சி­னை­யில் அனைத்­து­லக ஒலிம்­பிக் குழு­வு­ட­னும் தோக்­கியோ ஏற்­பாட்­டுக் குழு­வு­ட­னும் இணைந்து பணி­யாற்றி இந்­தப் போட்­டி­களை வெற்­றி­க­ர­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் நடத்த கடப்­பாடு கொண்­டுள்­ளது,” என்று கொக்கோ கோலா நிறு­வ­னப் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­யுள்­ளார்.

இந்­தப் பிரச்­சினை விளம்­பர ஆத­ரவு நிறு­வ­னங்­க­ளுக்கு பெரிய நிதிச் சுமையை ஏற்­ப­டுத்­தி­னா­லும் இந்­நி­று­வ­னங்­கள் தங்­களை அனைத்­து­லக ஒலிம்­பிக் குழு­வின் நீண்­ட­கால பங்­கா­ளி­க­ளா­கக் கரு­து­வ­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் தெரி­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!