ரொனால்டோதான் சிறந்த ஆட்டக்காரர்: பெலே புகழாரம்

ரொனால்டோதான் சிறந்த ஆட்டக்காரர்: பெலே புகழாரம்

1 mins read
7e508f3d-bcc4-4189-8346-489073df9a72
உல­கின் மிகச் சிறந்த காற்­பந்து வீரராக கிறிஸ்­டி­யோனா ரொனால்டோ (படம்) திகழ்­கி­றார் என்று பிரே­சில் காற்­பந்து சகாப்­தம் பெலே கூறி­யி­ருக்­கி­றார். -

ரியோ டி ஜெனிரோ: உல­கின் மிகச் சிறந்த காற்­பந்து வீரராக கிறிஸ்­டி­யோனா ரொனால்டோ (படம்) திகழ்­கி­றார் என்று பிரே­சில் காற்­பந்து சகாப்­தம் பெலே கூறி­யி­ருக்­கி­றார்.

அர்­ஜெண்­டினா அணித்­த­லை­வர் லய­னல் மெஸ்­ஸி­யைக் காட்­டி­லும் போர்ச்­சு­கல் அணித்­த­லை­வரான ரொனால்டோ திற­மை­யான ஆட்­டக்­கா­ரர் என்­பது 79 வய­தான பெலே­வின் கருத்து.

"இப்­போ­தைக்கு, ரொனால்­டோவே உல­கின் மிகச் சிறந்த காற்­பந்து ஆட்­டக்­கா­ரர். ஏனெ­னில், கடந்த பத்து ஆண்­டு­களுக்­கும் மேலாக அவர் சிறப்­பாக ஆடி வரு­கி­றார். அதே நேரத்­தில், மெஸ்­ஸி­யை­யும் மறந்­து­வி­டக்­கூ­டாது," என்று 'பிலாடோ' எனும் யூடி­யூப் ஒளி­வ­ழிக்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது பெலே குறிப்­பிட்­டார்.

ஆயி­னும், சான்­டோஸ், நியூ­யார்க் காஸ்­மோஸ், பிரே­சில் குழுக்­க­ளுக்­கா­கப் பல வெற்­றி­களைத் தேடித் தந்த தமது ஆட்­டத்­தைப் போல அவ்­வி­ரு­வ­ரின் ஆட்­ட­மும் இல்லை என்­றும் பெலே சொன்­னார்.

பிரே­சி­லின் ஸிக்கோ, ரொனால்­டி­னியோ, ரொனால்டோ நஸ­ரியோ, ஜெர்­ம­னி­யின் பிரான்ஸ் பெக்­கன்­போ­வர், நெதர்­லாந்­தின் யோகன் கிரைஃப் ஆகிய முன்­னாள் ஆட்­டக்­கா­ரர்­களை தமக்­குப் பிடித்­த­மா­ன­வர்­க­ளாக அவர் பட்­டி­ய­லிட்­டார்.

தமது பரம எதி­ரி­யான அர்­ஜெண்­டி­னா­வின் டியேகோ மர­டோனாவுக்குத் தமது பட்­டி­ய­லில் பெலே இடமளிக்கவில்லை.

"காற்­பந்­தில் ஒரே ஒரு ராஜா­தான். எல்­லா­ரை­யும்­விட பெலே­தான் சிறந்த ஆட்­டக்­கா­ரர்," என்று அவர் பெரு­மி­தம் கொண்­டார்.

மூன்று முறை உல­கக் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றிய ஒரே ஆட்­டக்­கா­ர­ரான பெலே, தமது 22 ஆண்­டு­கால தொழில்­முறை காற்­பந்து வாழ்க்­கை­யில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கோல்­களை அடித்­துள்­ளார்.