விம்பிள்டன்: அடுத்த வாரம் முடிவு

2 mins read
f6a83526-4777-41ea-8829-979a9120e35c
கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் பட்டத்தைக் கைப்பற்றிய ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹலியோ. படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: கிராண்ட் ஸ்லாம் போட்டி­க­ளின் ரத்­தி­ன­மா­கத் திக­ழும் விம்­பிள்­டன் பொது விரு­துப் போட்­டி­களை ஒத்­திப் போடு­வதா அல்­லது முற்­றி­லு­மா­கக் கைவி­டு­வதா என்­பது அடுத்த வாரத்­தில் தெரிந்­து­வி­டும்.

இவ்­வாண்­டிற்­கான விம்­பிள்­டன் போட்­டி­களை ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடத்த திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில், பிரிட்­ட­னி­லும் கொரோனா கிருமி பெரும் உயிர்ச் சேதத்­தை­யும் பாதிப்­பை­யும் ஏற்­படுத்தி வரு­வதைத் தொடர்ந்து, அனைத்து இங்­கி­லாந்து மன்­றம் அடுத்த வாரம் அவ­ச­ரக் கூட்­டத்­திற்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

பார்­வை­யா­ளர்­கள் இல்­லா­மல் மூடிய அரங்­கிற்­குள் போட்­டி­களை நடத்­தும் எண்­ண­மில்லை என்று அம்­மன்­றம் ஓர் அறிக்கை மூலம் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, மே மாதத்­தில் நடத்­தப்­ப­ட­வி­ருந்த பிரெஞ்­சுப் பொது விருது டென்­னிஸ் தொடர் செப்­டம்­பர் 20ஆம் தேதி­யில் இருந்து அக்­டோ­பர் 4ஆம் தேதி வரை நடத்த முடி­வு­செய்­துள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன், ஏடிபி, டபிள்­யூ­டிஏ டென்­னிஸ் தொடர்­களும் ஜூன் 7ஆம் தேதி வரை தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் எழுந்­துள்ள எதிர்­பா­ராத சவால், நாம் சற்­றும் நினைத்­துப் பார்க்க முடி­யா­த­படி பல வழி­க­ளி­லும் நமது வாழ்க்­கை­யைப் பாதித்து வரு­கிறது. பிரிட்­ட­னி­லும் மற்ற நாடு­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­டுள்­ளோரை எண்­ணிக் கலங்­கு­கி­றோம். பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­திற்கே அதிக முக்­கி­யத்­து­வம் தரப்­பட வேண்­டும். அந்த வகை­யில், விம்­பிள்­டன் போட்­டி­கள் தொடர்­பாக முடி­வெ­டுப்­ப­தில் பொறுப்­பாக நடந்­து­கொள்ள வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றோம்," என்று அனைத்து இங்­கி­லாந்து மன்­றத்­தின் தலைமை நிர்­வாகி ரிச்­சர்ட் லூவிஸ் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு நடந்த விம்­பிள்­டன் போட்­டி­களில் ஆட­வர் ஒற்­றை­யர் பிரி­வில் செர்­பி­ய வீரர் நோவாக் ஜோக்­கோ­விச்­சும் மக­ளிர் ஒற்­றை­யர் பிரி­வில் ருமே­னி­ய வீராங்கனை சிமோனா ஹாலெப்­பும் பட்­டத்­தைக் கைப்­பற்­றி­யது நினைவுகூரத்தக்கது.