ரோம்: இத்தாலியின் 'செரி ஆ' காற்பந்து லீக்கில் விளையாடிய பல வீரர்கள் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த 19 வயது டென்னிஸ் வீரர் தியாகோ செபோத். மார்ச் 1 ஆம் தேதி நடைபெற்ற சிலி பொதுவிருதுப் போட்டியில் நார்வே வீரரை வீழ்த்தி வெற்றியாளர் பட்டம் வென்றார். இதன்மூலம் மிக இளம் வயதில் ஏடிபி வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிரேசில் வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பரிசோதனை மேற்கொண்டார். அதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''நான் தற்போது கிருமித்தொற்றால் பாதித்துள்ளேன். இன்றுதான் மாதிரி பரிசோதனையில் தெரிய வந்தது. பத்து நாட்களுக்கு முன் காய்ச்சல் இருந்தது, அத்துடன் அறிகுறி தென்பட்டது. ஆனால் இன்னும் சில நாட்களில் கிருமியின் தாக்கம் குறைந்து குணமடைந்து விடுவேன்.
"கடந்த நில நாட்களாக நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால், ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதால் நான் வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறேன். இது மிகவும் கொடிய நோய். என்றாலும் ஒவ்வொருவருடைய வலிமையாலும் இதை கட்டுப்படுத்த முடியும்,'' என்றார்.

