ரூ.1 லட்சம்தானா? டோனி மீது விமர்சனம்; மனைவி பதிலடி

ராஞ்சி: சச்­சின் டெண்­டுல்­கர் ரூ.50 லட்­சம், சௌரவ் கங்­குலி ரூ.50 லட்­சம் என இந்­திய விளை­யாட்­டுப் பிர­ப­லங்­கள் பல­ரும் கொவிட்-19 தொற்­றுக்­கெதி­ரான போருக்­காக நன்­கொ­டை­களை வாரி வழங்கி வரு­கின்­ற­னர்.

இப்­ப­டி­யி­ருக்க, இந்­திய அணி­யின் முன்­னாள் தலை­வர் மகேந்­திர சிங் டோனி வெறும் ஒரு லட்ச ரூபாய் மட்­டும் நன்­கொடை வழங்கி இருப்­ப­தாக ஊட­கங்­களில் செய்தி பர­வி­யது.

இதை­ய­டுத்து, கிரிக்­கெட் மூலம் பல கோடி ரூபாய் வரு­மா­னம் ஈட்­டி­யுள்ள டோனி, இவ்­வ­ளவு குறை­வாக நன்­கொடை அளித்து இருப்­ப­தா­கச் சுட்டி, சமூக ஊட­கங்­கள் மூலமாகப் பலரும் அவரை விமர்­சித்­த­னர்.

இந்­நி­லை­யில், “இது­போன்ற உணர்­வு­பூர்­வ­மான வேளை­யில் பொய்ச் செய்­தி­க­ளைப் பரப்­பு­வதை ஊட­கங்­கள் நிறுத்­திக்­கொள்ள வேண்­டும். நீங்கள் வெட்­கித் தலை­கு­னிய வேண்­டும். பொறுப்­பான பத்­தி­ரி­கைப் பணி எங்கு மறைந்­து­போ­னது என்பது எனக்கு வியப்­பைத் தரு­கிறது,” என்று தமது டுவிட்­டர் பக்­கத்­தில் காட்­ட­மா­கப் பதி­விட்­டுள்­ளார் டோனி­யின் மனைவி சாக்‌ஷி.

‘கெட்டோ’ என்ற நிதி­தி­ரட்டு இணை­ய­த்­த­ளம் வழியாக புனே நக­ரைச் சேர்ந்த ஓர் அறக்கட்­ட­ளைக்கு டோனி ரூ.1 லட்­சம் நன்­கொடை வழங்­கி­யி­ருந்­தார் என்­பது­தான் உண்­மைத் தக­வல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!