ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனம்: இப்பருவப் போட்டிகள் நிறைவுபெறாமல் போகலாம்

ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனம்: இப்பருவப் போட்டிகள் நிறைவுபெறாமல் போகலாம்

1 mins read
e5bb522e-f1e8-40a2-810d-adb8af8c3d61
இந்­தப் பரு­வத்­துக்­கான காற்பந்துப் போட்­டி­கள் நிறை­வு­ பெ­றா­மல்போகக்­கூ­டும் என்று ஐரோப்­பிய காற்­பந்­துச் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் அலெக்­சாண்­டர் செவ­ரின் (வலது கவலை தெரி­வித்­துள்­ளார். கோப்புப்  படம்: இபிஏ-இஎஃப்இ -

ரோம்: கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஐரோப்­பா­வில் உள்ள அனைத்து காற்­பந்­துப் போட்­டி­களும் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

பிர­பல, இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக், ஸ்பெ­யி­னின் லா லீகா, இத்­தா­லி­யின் சிரி ஆ ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

இந்­நி­லை­யில், இந்­தப் பரு­வத்­துக்­கான போட்­டி­கள் நிறை­வு­ பெ­றா­மல்போகக்­கூ­டும் என்று ஐரோப்­பிய காற்­பந்­துச் சம்­மே­ள­னத்­தின் தலை­வர் அலெக்­சாண்­டர் செவ­ரின் கவலை தெரி­வித்­துள்­ளார்.

வரும் ஜூன் மாதம் இறு­திக்­குள் இப்­ப­ரு­வத்­துக்­கான போட்­டி­க­ளைத் தொடர முடி­யா­மல் போனால் போட்­டி­கள் நிறை­வு­பெ­றா­ம­லேயே போய்­வி­டும் அபா­யம் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இருப்­பி­னும், அடுத்த பரு­வம் தொடங்­கும்­போது இப்­ப­ரு­வத்­தில் விட்ட இடத்­தி­லி­ருந்தே தொட­ரும் சாத்­தி­யத்தை அவர் மறுக்­க­வில்லை.

இப்­ப­ரு­வத்­துக்­கான காற்­பந்­துப் போட்­டி­களை முடித்­து­வைக்­கும் விதம் தொடர்­பில் பல்­வேறு தெரி­வு­கள் இருப்­ப­தாக அவர் இத்­தா­லிய ஊட­கத்­தி­டம் தெரி­வித்­தார்.

மே மாதம் நடு­வில் அல்­லது ஜூன் மாதத்­தில் அல்­லது ஜூன் மாத இறு­தி­யில் போட்­டி­க­ளைத் தொடர திட்­டம் உள்­ளது. ஆனால் இது நிறை­வே­றா­வி­டில் போட்­டி­கள் நிறை­வு­பெ­றா­ம­லேயே போக­லாம்," என்­றார் செவ­ரின்.

"அடுத்த பரு­வம் தொடங்­கும்­போது இப்­ப­ரு­வத்­தைத் தொட­ரும் சாத்­தி­ய­மும் இருக்­கிறது. லீக் போட்­டி­க­ளுக்­கும் காற்­பந்­துக் குழுக்­க­ளுக்­கும் சிறந்த தீர்வை நாங்­கள் ஆராய்ந்து தேர்ந்­தெ­டுப்­போம்." என்­றார் செவ­ரின்.

"ரசி­கர்­கள் இல்­லா­மல் ஆட்­டங்­களை நடத்­து­வது மிக­வும் சிர­மம். இருப்­பி­னும், ஆட்­டங்­கள் தொட­ரும்­போது ரசி­கர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­களா என்று இன்­னும் முடி­வெ­டுக்­கப்­ப­ட­வில்லை," என்­றார் அவர். அனைத்து கிளப்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டன் காணொளி மூலம் பேசு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.