சம்பளவெட்டுக்கு இணங்கிய யுவெண்டஸ் வீரர்கள்

சம்பளவெட்டுக்கு இணங்கிய யுவெண்டஸ் வீரர்கள்

1 mins read
0cb9f8b9-e1c9-450a-a341-57feb139a190
யுவெண்டஸ் வீரர்கள். படம்: இபிஏ -

டூரின்: சம்­பளவெட்­டுக்கு இத்­தா­லி­யின் யுவெண்­டஸ் குழு­வின் ஆட்­டக்­கா­ரர்­களும் பயிற்­று­விப்­பா­ள­ரும் இணக்­கம் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்த சம்­பள வெட்டு மூலம் யுவெண்­ட­சுக்கு இந்த நிதி ஆண்­டில் $140 மில்­லி­யன் மிச்­ச­மா­கும் என்று நேற்று முன்­தி­னம் அறி­விக்­கப்­பட்­டது.

கொரோனா கிரு­மித்­தொற்று இத்­தா­லியை புரட்டி எடுத்­துள்­ளது. கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­டி­ருக்­கும் நெருக்­க­டி­நி­லையை யுவெண்­டஸ் சமா­ளிக்க உத­வும் வகை­யில் நான்கு மாதச் சம்­பள வெட்­டுக்கு அக்­கு­ழு­வின் ஆட்­டக்­கா­ரர்­களும் பயிற்­று­விப்­பா­ள­ரும் இணங்­கி­யுள்­ள­னர்.

காற்­பந்­துப் போட்­டி­கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­தால் குழுக்­க­ளின் வரு­மா­னம் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­பள வெட்டு தொடர்­பான விவ­ரங்­கள் பற்றி ஆட்­டக்­கா­ரர்­கள், பயிற்­று­விப்­பா­ளர் ஆகி­யோ­ரி­டம் அடுத்த சில வாரங்­களில் தெரி­விக்­கப்­படும் என்று யுவெண்­டஸ் குழு­வின் நிர்­வா­கம் கூறி­யது.

யுவெண்­டஸ் குழு­வின் பாவ்லோ டைபாலா, டேனி­யேல் ருகானி, பிலேசே மடு­யுடி ஆகிய மூன்று ஆட்­டக்­கா­ரர்­க­ளுக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது என்பது குறிப்பிடத்தக்கது.