புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக இந்தியப் பிரதமரின் நிவாரண நிதி மற்றும் உ.பி. மாநில அரசின் நிவாரண நிதிக்கு 52 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்காக 52 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சுரேஷ் ரெய்னாவின் அற்புதமான 50 எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ 51 கோடி ரூபாயை பிரதமரின் நிவாரண நிதி கணக்கிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

