வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய வீரருக்கு அபராதம்

வீட்டில் தங்கும் உத்தரவை மீறிய வீரருக்கு அபராதம்

2 mins read
9e099f02-e075-4161-ae49-9bb02ecf260f
பர்­மிங்­ஹம்: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் விதிக்­கப்­பட்ட வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை மீறிய ஆஸ்­டன் வில்லா காற்­பந்­துக் குழுத் தலை­வர் ஜேக் கிரி­லி­ஷிற்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று அக்­குழு தெரி­வித்­துள்­ளது. படம்: ஊடகம் -

பர்­மிங்­ஹம்: கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் விதிக்­கப்­பட்ட வீட்­டில் தங்­கும் உத்­த­ரவை மீறிய ஆஸ்­டன் வில்லா காற்­பந்­துக் குழுத் தலை­வர் ஜேக் கிரி­லி­ஷிற்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று அக்­குழு தெரி­வித்­துள்­ளது.

பர்­மிங்­ஹம்­மில் உள்ள தன் வசிப்­பி­டத்­தில் இருந்து கிரி­லிஷ் வெளியே சென்ற புகைப்­ப­டம் வெளி­யா­ன­தை­ய­டுத்து வெஸ்ட் மிட்­லேண்ட்ஸ் போலி­சார் அது தொடர்­பாக விசா­ர­ணையை தொடங்­கி­யுள்­ள­தாக பிரிட்­டி‌ஷ் ஊட­கத் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கார்­கள் மோதிக்கொண்ட சிறிய விபத்து தொடர்­பான புகைப்­ப­டங்­கள் இணை­யத்­தில் வலம் வந்­தன. அந்த இடத்­தில் ஆஸ்­டன் வில்லா குழு­வின் ஜேக் கிரி­லிஷ் இருந்த புகைப்­ப­ட­மும் அவற்­றுள் ஒன்று.

அர­சாங்­கத்­தின் விதி­மு­றை­களை மீறி­யது தொடர்­பாக அவர் மீது ஒழுங்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற ஆஸ்­டன் வில்லா குழு­வின் அறிக்கை வெளி­யா­வ­தற்கு சற்று முன்­னர், காணொளி வழி­யாக டுவிட்­ட­ரில் தன்­னு­டைய செய­லுக்கு மன்­னிப்பு கேட்­டார் கிரி­லிஷ்.

"நடந்த விஷ­யம் எனக்கு மிக­வும் தர்­ம­சங்­க­ட­மாக உள்­ளது. வெளியே சுற்றி வரு­மாறு என் நண்­பர் விடுத்த அழைப்பை நான் ஏற்­றுக்­கொண்­டது முட்­டாள்­த­ன­மா­னது.

"வேறு யாரும் நான் செய்த தவற்றை செய்­து­வி­ட­வேண்­டாம். அனை­வ­ரும் வீட்­டில் தங்­கும் உத்­த­ர­வைக் கடைப்­பி­டிக்­கு­மாறு வலி­யு­றுத்­து­கி­றேன். நான் இனி உத்­த­ர­வைச் சரி­யாக கடை­பி­டிப்­பேன்.

"அனை­வ­ரும் என் மன்­னிப்பை ஏற்­றுக்­கொள்­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்," எனக் காணொ­ளி­யில் கூறி­யி­ருந்­தார்.

கிரி­லி­ஷின் இச்­செ­யல் மிகுந்த ஏமாற்­ற­ம­ளிப்­ப­தாக அறிக்­கை­யில் கூறி­யுள்­ளது ஆஸ்­டன் வில்லா.

அவ­ரி­டம் இருந்து வசூ­லிக்­கப்­படும் அப­ரா­தத் தொகை பிர்­மிங்­ஹம்­மிங் அற­நி­று­வன மருத்­து­வ­மனை ஒன்­றுக்கு நன்­கொ­டை­யாக அளிக்­கப்­படும் என்­றும் குழு­வின் இணை­யப்­பக்­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிரிட்­ட­னில் கொவிட்-19 கிரு­மித் தொற்று இது­வரை 19,000 பேருக்கு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 1,200 மாண்­ட­னர்.