கவுண்ட்டி கிரிக்கெட் குழுவின் தலைவர் கிருமித் தொற்றுக்கு பலி

கவுண்ட்டி கிரிக்கெட் குழுவின் தலைவர் கிருமித் தொற்றுக்கு பலி

1 mins read
03958a8c-1bf4-47ac-b1c5-0a3d021c0bc0
இங்­கி­லாந்து கவுண்ட்டி கிரிக்­கெட் குழு­வான லங்­கா­ஷ­யர் குழு­வின் தலை­வர் 71 வய­தான டேவிட் ஹாட்ஜ்­கிஸ் (படம்) கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக்கு பலி­யா­னார்.  படம்: ஊடகம் -

லண்­டன்: இங்­கி­லாந்து கவுண்ட்டி கிரிக்­கெட் குழு­வான லங்­கா­ஷ­யர் குழு­வின் தலை­வர் 71 வய­தான டேவிட் ஹாட்ஜ்­கிஸ் (படம்) கொவிட்-19 கிரு­மித் தொற்­றுக்கு பலி­யா­னார்.

அவ­ருக்கு ஏற்­கெ­னவே சில உடல்­ந­லப் பிரச்­சி­னை­கள் இருந்­த­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

1998ஆம் ஆண்­டில் குழு­வில் இணைந்த இவர் 2017 ஏப்­ரல் மாதத்­தில் தலை­வ­ராக பதவி பெற்­றார்.

இது தொடர்­பாக லங்­கா­ஷ­யர் கிரிக்­கெட் குழு வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "டேவிட் தனித்­து­வ­மான முறை­யில் கிளப்­புக்கு சேவை­யாற்­றி­யுள்­ளார். பொரு­ளா­ளர், துணைத் தலை­வர், தலை­வர் என்று பெரிய பொறுப்­பு­க­ளைத் திறம்­ப­டக் கையாண்­டார்.

அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு எங்­கள் ஆழந்த இரங்­க­லைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்," என்று கூறி­யி­ருந்­தது.

இங்­கி­லாந்து கிரிக்­கெட் வாரி­யத் தலை­வர் கோலின் கிரேவ்ஸ் கூறும்­போது, "லங்­கா­ஷ­யர் குழு­வின் மிக முக்­கி­ய­மான ஒரு அங்­க­மா­கத் திகழ்ந்­தார் டேவிட். நாட்­டில் விளை­யாட்டை வளர்க்­க­வும், இளை­யோர்­க­ளைப் பெரி­தும் ஊக்­கு­விக்­க­வும் செய்­த­வர் அவர்," என்­றார்.