மருத்துவர்களுக்கு ஆதரவு; மொட்டையடித்த வார்னர்

மருத்துவர்களுக்கு ஆதரவு; மொட்டையடித்த வார்னர்

1 mins read
6d7d5ec3-b1c0-4eeb-86d5-ea18f8838675
ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி வீரர் டேவிட் வார்­னர் (படம்), தலையை மொட்­டை­ய­டித்துக் கொண்டு, கிரு­மித் தொற்று பாதிப்­பில் மக்­க­ளுக்­கா­கப் போரா­டும் மருத்­து­வர்­க­ளுக்­குத் தன்­னு­டைய ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளார்.  படம்: ஊடகம் -

சிட்னி: ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் அணி வீரர் டேவிட் வார்­னர் (படம்), தலையை மொட்­டை­ய­டித்துக் கொண்டு, கிரு­மித் தொற்று பாதிப்­பில் மக்­க­ளுக்­கா­கப் போரா­டும் மருத்­து­வர்­க­ளுக்­குத் தன்­னு­டைய ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளார்.

மொட்­டை­ய­டித்­துக் கொண்ட வார்­னர், தன்­னு­டைய சக வீரர் ஸ்டீவ் ஸ்மித், இந்­திய அணித் தலை­வர் விராத் கோஹ்லி ஆகிய இரு­வ­ரை­யும் அவ்­வாறு செய்­யும்­படி சவால் விடுத்­துள்­ளார்.

வார்­னர் தன்­னு­டைய இன்ஸ்­டகி­ராம் பக்­கத்­தில் மொட்­டை­ய­டித்த காணொ­ளி­யைப் பதி­விட்டு, "மக்­க­ளுக்­காகப் பணி­யாற்­று­வோ­ருக்கு ஆத­ர­வாக என் தலையை மொட்­டை­ய­டிக்­கப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டேன்.

"என்­னு­டைய அறி­மு­கத்­தின் போது இதைச் செய்­தேன் என்று நினைக்­கி­றேன். பிடித்­தி­ருக்­கி­றதா, இல்­லையா," என்று அதற்­குத் தலைப்­பிட்­டார்.

சிட்னி மார்­னிங் ஹெரால்டு செய்­திப்­படி, கொரோனா வைரஸ் தொற்­று­நோய் கார­ண­மாக, ஆஸ்­தி­ரே­லி­யா­வின் இறப்பு எண்­ணிக்கை 19ஆக உள்­ளது.