கொவிட்-19: பெரும் இழப்பை எதிர்கொள்ளும் சிட்டி

கொவிட்-19: பெரும் இழப்பை எதிர்கொள்ளும் சிட்டி

1 mins read
52d9e5e5-07d2-47aa-9d9e-b9d329fda492
கிரு­மித் தொற்று கார­ண­மாக இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் சிட்டி மற்ற குழுக்­க­ளைக் காட்­டி­லும் ஆக அதி­க­மாக 412 மில்­லி­யன் யூரோ (S$ 647 மில்­லி­யன்) இழப்பை எதிர்­கொள்ள நேரி­டும் என்­றும் சொல்­கிறது ஆய்வு ஒன்று கூறுகிறது. படம்: ஏஎப்பி -

ஜெனிவா: கிரு­மித் தொற்று கார­ண­மாக குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான லீக் காற்­பந்­துப் போட்­டி­கள் தள்ளி வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அது ஐரோப்­பா­வின் முன்­னணி லீக் குழுக்­களில் உள்ள வீரர்­க­ளின் பரி­மாற்ற சந்தை மதிப்­பி­லும் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் என்று சுவிஸ் நாட்­டைச் சேர்ந்த அனைத்­து­லக விளை­யாட்டு மையத்­திற்­கான காற்­பந்து ஆய்­வ­கத்­தின் ஆய்வு தெரி­விக்­கிறது.

இங்­கி­லாந்து, ஸ்பெ­யின், ஜெர்­மனி, இத்­தாலி மற்­றும் பிரான்ஸ் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த ஐரோப்­பா­வின் முன்­னணி ஐந்து காற்­பந்து லீக் குழுக்­க­ளைச் சேர்ந்த வீரர்­க­ளின் மதிப்பு 28 விழுக்­காடு சரி­வ­டை­யும் என்­கிறது அந்த ஆய்வு.

அதா­வது இப்­ப­ரு­வத்­தில் இனி எந்த ஆட்­ட­மும் விளை­யா­டப்­ப­டா­மல் போனா­லும் ஜூன் மாதத்­தில் முடி­வ­டை­யும் ஒப்­பந்­தங்­கள் புதுப்­பிக்­கப்­ப­டா­மல் போகும் நிலை­யி­லும் 32.7 பில்­லி­யன் யூரோ­வி­லி­ருந்து (S$51.4 பில்­லி­யன்) 23.4 யூரோ­வாக சரி­யக்­கூ­டும்.

இதில் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான மான்­செஸ்­டர் சிட்டி மற்ற குழுக்­க­ளைக் காட்­டி­லும் ஆக அதி­க­மாக 412 மில்­லி­யன் யூரோ (S$ 647 மில்­லி­யன்) இழப்பை எதிர்­கொள்ள நேரி­டும் என்­றும் சொல்­கிறது அந்த ஆய்வு.

அத­னை­ய­டுத்து, ஸ்பா­னிய காற்பந்துக் குழு­வான பார்­சி­லோ­னா­விற்கு 366 மில்­லி­யன் இழப்­பும் லிவர்­பூ­ல் குழுவிற்கு 353 மில்­லி­யன் யூரோ­வும் இழப்பு ஏற்­ப­டக்­கூ­டும் என்று கூறப்படுகிறது.