கொரோனா கிருமியை எதிர்கொள்ள ஹாரிஸ் ஹருண் உதவி

சிங்­கப்­பூர் காற்­பந்­துக் குழு, ஜோகூர் டாருல் தஸிம் (ஜேடிடி) காற்­பந்­துக் குழு ஆகி­ய­வற்­றுக்கு தலை­வர் பொறுப்பு வகிக்­கும் ஹாரிஸ் ஹருண் (படம்), சக வீரர்­க­ளுக்கு ஒரு முன்­மா­தி­ரி­யாக திகழ்­ப­வர்.

தற்போது, கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் தமக்­கு­ரிய பங்கை ஆற்ற அவர் முன்­வந்­துள்­ளார்.

இந்­தச் சோத­னை காலத்­தில் சமு­தா­யத்­திற்கு உதவ ஜேடிடி குழு வீரர்­கள், பயிற்­று­விப்­பா­ளர்­கள், இதர ஊழி­யர்­கள் ஆகி­யோ­ரது சம்­ப­ளம் 33 விழுக்­காடு குறைக்­கப்­ப­டு­வ­தாக ஜேடிடி குழு கடந்த ஞாயிற்­றுக்­கிழமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அது­போக, வீரர்­கள் பெறும் சம்­ப­ளத்­தின் ஒரு பகுதி, ஜோகூர் பேரி­டர் நிதிக்கு நன்­கொ­டை­யாக வழங்­கப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐந்­தி­லக்க சம்­ப­ளம் பெறும் மத்­திய திடல் ஆட்­டக்­கா­ர­ரான 29 வயது ஹாரிஸ், உல­க­ள­வில் வேக­மா­கப் பரவி வரும் கொரோனா கிருமி, மனி­த­கு­லத்­திற்­குப் பெரும் சவா­லைத் தந்­துள்­ள­தா­கக் கூறி­னார். இந்த இருண்ட கால­கட்­டத்தை மக்­கள் அனை­வ­ரும் கடந்து வர மேலும் அதி­க­மா­னோர் உதவ முன்­வர வேண்­டும் என அவர் கேட்­டுக்­கொண்­டார்.

ஜோகூர் பேரி­டர் நிதிக்கு நன்­கொடை வழங்­கு­வது குறித்து கருத்­து­ரைத்த ஹாரிஸ், “இது மிகச் சிறந்த முயற்சி. சிர­ம­மான கால­கட்­டத்­தில் மக்­க­ளின் நலன் குறித்து எங்­க­ளது குழு கவலை கொண்­டுள்­ளது,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!