மிகவும் கவனமாக இருங்கள்: டைபாலா அறிவுறுத்தல்

டூரின்: உலக நாடு­களில் கொரோனா கிரு­மித்­தொற்று மிக வேக­மாகப் பரவி வரும் நிலை­யில் இத்­தாலி காற்­பந்து லீக் போட்­டி­யின் ஜாம்­ப­வான்­களில் ஒன்­றான யுவெண்­டஸ் குழு­வின் மூன்று வீரர்­களும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களில் நட்­சத்­திர வீரர் பாவ்லோ டைபா­லா­வும் ஒரு­வர். இந்­நி­லை­யில், தமக்கு ஏற்­பட்ட மிகக் கசப்­பான அனு­ப­வத்­தைப் பற்றி அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

அது­மட்­டு­மல்­லாது, கொரோனா கிரு­மித்­தொற்று மிக­வும் ஆபத்­தா­னது என்­றும் அந்­நோ­யால் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க வீட்­டி­லேயே இருக்­கும்­படி அனை­வ­ரை­யும் அவர் கேட்­டுக்­கொண்­டார்.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இத்­தா­லி­யில் ஆக அதி­க­மான உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. டைபா­லா­வுக்­கும் அவ­ரது காத­லிக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது கடந்த மாதம் உறு­தி­யா­னது. இதை­ய­டுத்து இரு­வ­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு சிகிச்சை பெற்று வந்­த­னர். தற்­போது அவர்­கள் குண­ம­டைந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

“வீட்­டிற்­குள்­ளேயே இருங்­கள். இதுவே கொரோ­னாவைக் கட்­டுப்­ப­டுத்த தற்­போது எல்லா நாடு­களும் கடைப்­பி­டிக்க வேண்­டிய ஒரே ஆயு­த­மாக உள்­ளது. கொரோனா விஷ­யத்­தில் கவ­ன­மாக இருங்­கள்,” என டைபாலா தெரி­வித்­துள்­ளார். ‘ஒவ்­வொரு நாட்­களும் ஏரா­ள­மான மக்­கள் மர­ணம் அடை­கின்­ற­னர். நிலைமை மிக­வும் மோச­மாகி வரு­கிறது. இத்­தா­லி­யில் நிலைமை மிக­வும் மோச­மாக இருப்­ப­தா­லும் உள்­ளூர் மருத்­து­வர்­க­ளால் சமா­ளிக்க முடி­வில்லை என்­ப­தா­லும் ஏரா­ள­மான நாடு­கள் மருத்­து­வர்­களை அனுப்பி வைத்­துள்­ளன.

“கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­வேன் என்று நான் நினைத்­துக்­கூட பார்க்­க­வில்லை. வீட்­டுக்­குள்­ளேயே தங்­கி­யி­ருங்­கள் என்ற அறி­வுரை விளை­யாட்­டல்ல. இதைப் பின்­பற்றி மிக­வும் கவ­ன­மாக இருங்­கள்.

“எனக்கு மோச­மான இரு­மல் இருந்­தது. தூங்­கும்­போது மிக­வும் சோர்­வாக இருந்­தேன். குளி­ராக இருப்­பது போன்று உணர்ந்­தேன். முத­லில் இது என்­ன­வாக இருக்­கும் என்­பது குறித்து நினைக்­க­வில்லை. ஆனால், முத­லில் எனது சக வீரர்­கள் இரு­வ­ருக்கு கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்ட பிறகு, எனக்­கும் அது தொற்­றிக் கொண்­டது உறு­தி­யா­னது.

“எங்­க­ளுக்கு தலை­வலி இருந்­தது. ஆனால், எந்த மருந்­தை­யும் நாங்­கள் உட்­கொள்­ள­வில்லை. யுவெண்­டஸ் கிளப்­ எங்­க­ளுக்கு வைட்­ட­மின் மாத்­தி­ரை­க­ளைக் கொடுத்­தது. அதன்­பின் நாங்­கள் குண­ம­டைந்து வந்­ததை உணர்ந்­தோம். இது மன­நி­லையைப் பொறுத்­தது. முத­லில் பய­மாக இருந்­தது. தற்­போது சரி­யா­கி­விட்­டது. தற்­போது எங்­க­ளுக்கு எந்­த­வி­த­மான அறி­கு­றி­யும் இல்லை. நான் வேக­மாக சோர்­வ­டைந்­தேன். பயிற்சி எடுக்க விரும்­பி­னேன். ஆனால், ஐந்து நிமி­டத்­திற்குப் பிறகு மூச்சு விட திண­றி­னேன். அப்­போ­து­தான் எங்­க­ளுக்கு ஏதோ ஒன்று சரி­யில்லை என்­பது தெரி­ய­வந்­தது. அதன்­பின் பரி­சோ­த­னை­யில் கிருமித்தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது’’ என்­றார் டைபாலா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!