கொரோனா நெருக்கடி: பங்ளாதே‌ஷ் கிரிக்கெட் வீரர் மொசாடெக் உதவிக்கரம்

டாக்கா: கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்பு கார­ண­மாக மக்­கள் கடும் துன்­பத்­துக்கு ஆளாகி உள்­ள­னர். பங்­ளா­தேஷ் கிரிக்­கெட் வீரர் மொசா­டெக் ஹோசைன் நலிந்த குடும்­பங்­க­ளுக்கு உணவு மற்­றும் ஆடை­கள் வழங்கி உதவி செய்­துள்­ளார்.

கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த பெரும்­பா­லான நாடு­களில் ஊட­ரங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் நலிந்த குடும்­பத்­தி­னர் உணவு இன்றி தவித்து வரு­கி­றார்­கள். ‘‘ஒவ்­வொ­ரு­வ­ரும் நல­மாக இருக்க வேண்­டும். கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து  இவர்­கள் விடு­ப­டு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன். என்­னால் முடி­யும் அள­விற்கு நான் உதவி செய்­கி­றேன். 

“ஒவ்­வொ­ரு­வ­ரும் அவர்­கள் தகு­திக்கு ஏற்ப ஏழை மக்­க­ளுக்கு உதவி செய்ய முன் வர­வேண்­டும்,” என்­றார் பங்­ளா­தே­ஷில் நலிந்­த­வர்­க­ளுக்கு உதவி செய்த மொசா­டெக் ஹோசைன்.