நிதி திரட்டும் காற்பந்து வீரர்கள்

நிதி திரட்டும் காற்பந்து வீரர்கள்

2 mins read
825886f7-111f-4bf7-84bb-49a3b442e3dc
இங்கிலாந்து, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக்களின் தலைவர் ஹேரி கேன் உட்பட நூற்றுக்கணக்கான இபிஎல் காற்பந்து வீரர்கள் 'பிளேயர்ஸ் டுகெதர்' என்ற நிதிதிரட்டு முயற்சியைப் பற்றி தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்து கொண்டுள்ளனர். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: கொவிட்-19 கிருமி பேயாட்­டம் போட்டு வரும் நிலை­யில் பிரிட்­ட­னின் தேசிய சுகா­தார சேவைக்­காக நிதி திரட்­டும் முயற்­சியை இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து விளை­யாட்­டா­ளர்­கள் தொடங்கி இருக்­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போராட்­டத்­தில் முதல்­நி­லை­யில் இருக்­கும் தேசிய சுகா­தார சேவை ஊழி­யர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் 'பிளே­யர்ஸ் டுகெ­தர்' எனும் பெய­ரில் அந்த நிதி­தி­ரட்டு முயற்சி நேற்று முன்­தி­னம் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டது.

லீக் பட்­டி­ய­லில் முத­லி­டத்­தில் இருக்­கும் லிவர்­பூல் குழு­வின் தலை­வர் ஜோர்­டன் ஹெண்­டர்­சன், டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் மற்­றும் இங்­கி­லாந்து குழுக்­க­ளின் தலை­வர் ஹேரி கேன், ஆர்­ச­னல் குழு­வின் பியர் எமெ­ரிக் ஒப­மெ­யாங், மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­வின் தலை­வர் ஹேரி மெக்­வா­யர் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கான வீரர்­கள் இந்த நிதி­தி­ரட்டு முயற்சி குறித்து தங்­க­ளது சமூக ஊட­கப் பக்­கங்­களில் பதி­விட்­டுள்­ள­னர்.

இந்த நிதி­தி­ரட்டு முயற்­சிக்­காக தேசிய சுகா­தார சேவை அறக்­கட்­ட­ளை­கள் அமைப்­பு­டன் அவர்­கள் கைகோத்­துள்­ள­னர்.

முன்­ன­தாக, தேசிய சுகா­தார சேவைக்­குப் பங்­க­ளிப்­ப­தன் மூலம் காற்­பந்து விளை­யாட்­டா­ளர்­கள் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் தங்­க­ளது பங்கை ஆற்­ற­வேண்­டும் என்று பிரிட்­டிஷ் சுகா­தார அமைச்­சர் மேட் ஹேன்­காக் வலி­யு­றுத்தி இருந்­தார்.

அதே­போல, அனைத்து வீரர்­க­ளுக்­கும் 30% ஊதி­யத்­தைக் குறைக்­க­வேண்­டும் என்று பிரி­மி­யர் லீக் யோசனை கூறி­யது. இருந்­தா­லும், அப்­படி ஊதி­யத்­தைக் குறைத்­தால் அதன்­மூ­லம் சம்­பந்­தப்­பட்ட குழுக்­களும் அதன் உரி­மை­யா­ளர்­களும் பய­ன­டை­வார்­களே ஒழிய, அது சுகா­தார சேவைக்­குச் சென்று சேராது எனக் கூறி வீரர்­கள் பல­ரும் அதற்கு எதிர்ப்­புத் தெரி­விக்க, ஊதியக் குறைப்புத் திட்டம் கைவிடப்பட்டது.

முன்கூட்டியே பரிசுத்தொகையில் பங்கு

இதற்­கி­டையே, நடப்பு பிரி­மி­யர் லீக் பரு­வம் இன்­னும் முடி­வுக்கு வரா­த­போ­தும் பரி­சுப் பணத்­தில் ஒரு பகுதி முன்­கூட்­டியே குழுக்­க­ளுக்கு அளிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கத் தக­வல் வெளி­யா­கி­ உள்­ளது என்று 'தி டைம்ஸ்' செய்தி தெரி­விக்­கிறது. கிரு­மித்­தொற்­றுப் பிரச்­சி­னை­யால் பல குழுக்­களும் நிதி நெருக்­க­டி­யில் தவிப்­ப­தால் அவற்­றுக்கு உத­வும் நோக்­கில் பரி­சுத்­தொகை முன்­ன­தா­கவே வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அப்­படி முன்­கூட்­டியே வழங்­கப்­படும் பரி­சுப் பணமே மில்­லி­யன்­க­ணக்­கில் இருக்­கும் என்­றும் பட்­டி­ய­லின் மேல்­நி­லை­யில் இருக்­கும் குழுக்­க­ளைப் பொறுத்­த­மட்­டில் அது 20 மில்­லி­யன் பவுண்­டுக்­கும் கூடு­த­லாக இருக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.