இங்கிலிஷ் காற்பந்துப் பருவம்: அனைத்து வீரர்களையும் பரிசோதிக்க வேண்டும்

லண்­டன்: அனைத்து காற்­பந்து வீரர்­க­ளும் கொரோனா கிருமித்­தொற்­று பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே இங்­கி­லிஷ் காற்­பந்­துப் பரு­வத்தைத் தொடங்க முடி­யும் என லீக் நிர்­வா­கி­கள் சங்­கத்­தின் தலைமை நிர்­வாகி ரிச்­சர்ட் பீவன் கூறி­யுள்­ளார்.

“தேசிய சுகா­தா­ரச் சேவை ஊழி­யர்­கள் மற்­றும் நோயா­ளி­கள்­தான் முத­லில் கொரோனா கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னைக்கு உட்­படுத்­தப்­ப­டு­வர்.

“அதன் பின்­னரே, விளை­யாட்டுத் துறை­யில் ஈடு­ப­டு­வோருக்குப் பரி­சோ­தனை நடத்­தப்­பட வேண்­டும்,” என்று பிபிசி செய்தி நிறு­வ­னத்­தி­டம் பீவன் கூறி­னார்.

கொரோனா கிரு­மித்­தொற்றால் பிரிட்­ட­னில் காற்­பந்து ஆட்­டங்­கள் நிறுத்­தி­வைக்­கப்­பட்டு ஒரு மாத­கா­ல­மா­கி­விட்­டது. கிரு­மித்­தொற்­றுக்கு அந்­நாட்­டில் கிட்­டத்­தட்ட 9,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

கொரோனா கிரு­மித்­தொற்று அலை ஓய்ந்த பிறகு இரண்டு மாதங்­க­ளுக்­குள் நடப்பு காற்­பந்­துப் பரு­வத்­தில் எஞ்­சிய பகு­தியை முடித்­து­வி­ட­லாம் எனக் காற்­பந்து லீக் தலை­வர்­கள் நம்­பிக்­கை­யு­டன் உள்­ள­னர்.

“இம்­மாத இறு­தி­யில்­தான் நில­வ­ரம் எப்­படி மாறு­கிறது என்­பதை அறிய முடி­யும். அது­வரை, எஞ்­சிய காற்­பந்­துப் பரு­வம் எப்­போது தொடங்­கும் என்­பது குறித்து எங்­க­ளால் கணிக்க முடி­யாது,” என்று பீவன் கூறி­னார்.

ஜெர்­ம­னி­யில் காற்­பந்­துப் பரு­வத்தை அடுத்த மாதம் தொடங்­கு­வது குறித்து காற்­பந்து அதி­கா­ரி­கள் கலந்­தா­லோ­சிப்­பதை பீவன் சுட்­டி­னார்.

“ஜெர்­ம­னி­யில் நாள் ஒன்­றுக்கு 50,000 பேருக்கு கொரோனா பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் நமது நாட்­டில் (பிரிட்­ட­னில்) நாள் ஒன்­றுக்கு 10,000 பேர் மட்­டுமே பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னர்,” என்று கூறிய அவர், இம்­மாத இறு­திக்­குள் அந்த எண்­ணிக்­கையை 100,000ஆக உயர்த்த அர­சாங்­கம் இலக்கு கொண்­டி­ருப்­ப­தைச் சுட்­டி­னார்.

காற்­பந்து வீரர்­கள் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­படும் வரை தாங்­கள் திட­லுக்கு வர நிர்­வா­கி­கள் விரும்­ப­வில்லை என்று பீவன் சொன்­னார்.

இந்­நி­லை­யில், இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் போட்­டிற்கு அடுத்த நிலை­யில் உள்ள சாம்­பி­யன்­ஷிப் மற்­றும் மூன்­றா­வது, நான்­கா­வது நிலை லீக் போட்­டி­களில் விளை­யா­டும் குழுக்­க­ளுக்கு காற்­பந்து லீக் கடந்த வாரம் கடி­தம் ஒன்றை அனுப்­பி­யது.

கொரோனா கிருமி பர­வு­வது ஒரு­பு­ற­மி­ருக்க, காற்­பந்து லீக் போட்­டி­க­ளின் எஞ்­சிய பரு­வத்தை முடித்­து­வி­டு­வ­தில் தமக்கு நம்­பிக்கை இருப்­ப­தாக அக்­க­டி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

எனி­னும், இது குறித்து குழுக்­க­ளின் நிர்­வா­கி­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து பிறகே முடி­வெ­டுக்க வேண்­டும் என பீவன் கூறி­னார்.

“நிர்­வா­கி­கள், பயிற்­று­விப்­பா­ளர்­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்த பிறகே முடி­வெ­டுக்­கப்­பட வேண்­டும். அவர்­க­ளின் கருத்­தைக் கேட்­ட­றி­யா­மல் ஒன்­றும் செய்ய முடி­யாது,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!