திறனை வெளிப்படுத்தி போட்டியில் வெல்ல வாய்ப்பு

திறனை வெளிப்படுத்தி போட்டியில் வெல்ல வாய்ப்பு

1 mins read
9a91262d-9f3f-4a9f-bf26-88130e8dfc11
இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் பங்கேற்கும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் தென்கிழக்காசிய கிளை சிங்கப்பூரில் 2015ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. இந்த இக்கட்டான காலகட்டத்தில் தனது ரசிகர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள புதிய போட்டியை அது அறிமுகம் செய்துள்ளது. படம்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்து குழு (சிங்கப்பூர் அலுவலகம்) -

கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தால் இங்­கி­லி‌‌ஷ் பிரி­மி­யர் லீக் (இபி­எல்) காற்­பந்து ஆட்­டங்­கள் கடந்த மார்ச் மாதத்­தி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக ரத்­து­செய்­யப்­பட்­டுள்­ளன.

இம்­மா­தம் 18ஆம் தேதி இபிஎல் மீண்­டும் தொடங்­கும் வரை காற்­பந்து ரசி­கர்­கள் காத்­தி­ருக்க வேண்­டும்.

காற்­பந்து ஆட்­டங்­கள் இன்­னும் தொடங்­க­வில்­லையே என்ற காற்­பந்து ரசி­கர்­க­ளின் ஏக்­கம் தொடர, இங்­குள்ள ரசி­கர்­க­ளுக்­காக மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு இம்­மா­தம் 'ஃபிபா20' எனும் விளை­யாட்­டுப் போட்­டிக்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இணை­யம்­வழி நடத்­தப்­படும் இந்த 'பிளேஸ்­டே­ஷன்4' விளை­யாட்­டுப் போட்டி இம்­மா­தம் 13, 14, 20, 21 ஆகிய தேதி­களில் நடக்­கும்.

13ஆம் தேதி இப்­போட்­டிக்­கான தகு­திச்சுற்று தொடங்­கும்.

அதற்கு மறு­வா­ரம் நடக்­கும் இறு­திச் சுற்று ஆட்­டங்­களை மான்­செஸ்­டர் சிட்டி குழு­வின் அதி­கா­ரத்­துவ ஃபேஸ்புக் தளத்­தில் நேர­டி­யாக காண­லாம்.

போட்­டி­யின் வெற்­றி­யா­ள­ருக்கு $2,000 பரிசுத் தொகை­யும் மான்­செஸ்­டர் சிட்டி குழு­வின் ரசி­கர்­க­ளுக்­கான விற்­பனை பொருட்­களும் காத்­தி­ருக்­கின்­றன.

இப்­போட்­டி­யில் கலந்­து­கொண்டு உங்­க­ளது விளை­யாட்­டுத் திறனை வெளிக்­காட்ட ஆசையா?

https://play.eslgaming.com/fifa/playstation/fifa20-ps4/open/man-city-cup என்ற இணை­யப் பக்­கத்­திற்கு சென்று இப்­போட்­டிக்கு நீங்­கள் பதி­வு­செய்­ய­லாம்.