30 ஆண்டுகளுக்குப் பிறகு லிவர்பூலின் கனவு நிறைவேறியது

லண்­டன்: 1990ஆம் ஆண்­டிற்­குப் பிறகு முதன்­மு­றை­யாக இங்­கி­லிஷ் பீரி­மி­யர் லீக் காற்­பந்து பட்­டத்தை வென்­றது நிர்­வாகி கிளோப் தலை­மை­யி­லான லிவர்­பூல் குழு.

நேற்று அதி­காலை நடந்த ஆட்­டத்­தில் செல்சி குழுவை 2-1 என வீழ்த்­தி­ய­தன் மூலம் லிவர்பூலின் முப்­பது ஆண்­டு­ கால கனவு நன­வா­னது.

இன்­னும் ஏழு ஆட்­டங்­கள் எஞ்­சி­யி­ருக்க, லிவர்­பூல் அணி நடப்புத் தொட­ரில் இது­வரை 28 வெற்­றி­கள், 2 சம­நிலை, 1 தோல்வி என 86 புள்­ளி­க­ளு­டன் 23 புள்­ளி­கள் முன்­னிலை பெற்று முத­லி­டத்­தில் உள்­ளது.

ஆட்­டத்­திற்­குப் பிறகு பேசிய லிவர்­பூல் நிர்­வாகி கிளோப், “மகிழ்ச்­சியைச் சொல்­வ­தற்கு வார்த்­தை­கள் இல்லை. நம்­ப­மு­டி­யாத ஒன்று.

“நான் முப்­பது ஆண்­டு­கள் காத்­தி­ருக்­க­வில்லை, என்­றா­லும் நான்­கரை ஆண்­டு­க­ளாக காத்­தி­ருக்­கி­றேன். அது­வும் மூன்று மாத இடை­வெ­ளிக்குப் பிறகு எங்­க­ளால் தொடர்ந்து செல்ல முடி­யுமா என்று யாருக்­கும் தெரி­யாது,” என்­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!