பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்து பயணம்

இங்கிலாந்தில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் சிறப்பு விமானம் மூலம் நேற்று புறப்பட்டனர். இத்தொடருக்குத் தேர்வு செய்யப்பட்ட 29 பாகிஸ்தான் வீரர்களில், ஆல்-ரவுண்டர் முகமது ஹபீஸ் உள்ளிட்ட 10 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மற்றவர்கள் பயணம் மேற்கொண்டனர். இங்கிலாந்திலும் அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். பிறகு அவர்கள் ஒர்செஸ்டரில் உள்ள விடுதியில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பிறகு ஜூலை 13ஆம் தேதியில் இருந்து பயிற்சியில் ஈடுபடுவார்கள். லாகூர் விமான நிலையத்தில் காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்கள்.