காற்பந்து: மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கால் இறுதி சுற்றை அடைந்தது லியோன்

காற்பந்து: மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கால் இறுதி சுற்றை அடைந்தது லியோன்

1 mins read
653a0702-0a92-48ec-9afe-474e94d23d09
படம்; ஏஃப்பி -

முசா டம்பலே என்ற பிரஞ்சு நாட்டின் லியோன் காற்பந்து அணியின் விளையாட்டாளர் இறுதி நிமிடங்களில் அடித்த இரண்டு கோல்கள், இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியைக் கிட்ட காரணமானது.

இன்று அதிகாலை நடந்த போட்டியில் 79ஆம் நிமிடத்தில் கோல் அடித்து, 2-1 கோல் கணக்கில் லியோனை முன்னுக்கு எடுத்துச் சென்றார் டம்பலே.

ஆட்டம் முடிய மூன்று நிமிடங்கள் இருந்த நிலையில் லியோன் குழுவிற்கு மூன்றாவது கோல் அடித்து லியோனுக்கு வெற்றியை நிச்சயப்படுத்தினார் டம்பலே.

ஐரோப்பிய காற்பந்து சாம்பியன்ஸ் லீக் கால் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள லியோன், அடுத்து பாயர்ன் மியூனிக் அணியைச் சந்திக்கவுள்ளது.