சமூக கிண்ணம் வென்ற ஆர்சனல்

சமூக கிண்ணம் வென்ற ஆர்சனல்

1 mins read
a917510b-7a41-4507-b6a8-9a2652450958
எஃப்ஏ சமூக கிண்ணத்தை வென்ற மகிழ்ச்சியில் ஆர்சனல் வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: காற்­பந்­துக்­கான எ­ஃப்ஏ சமூக கிண்­ணத்தை வென்று புதிய பரு­வத்தை ஊக்­கத்­தோடு தொடங்கி­யுள்­ளது ஆர்­ச­னல்.

வெம்­பிளே அரங்­கில் லிவர்­பூல்- ஆர்­ச­னல் குழுக்­கள் மோதிய இந்த ஆட்­டம் 1-1 என சம­நி­லை­யில் முடிந்­தது. இதை­ய­டுத்து நடந்த பெனால்டி முறை­யில், 5-4 என லிவர்­பூலை வீழ்த்­தி­யது ஆர்­ச­னல்.

லிவர்­பூ­லுக்­காக கடைசி நேர மாற்று ஆட்­டக்­கா­ர­ராக கள­மி­றங்­கிய ரியான் ப்ரூஸ்­டர், பெனால்டி வாய்ப்­பில் பந்தை வலைக்­குள் உதைக்­கா­த­தால் அக்­கு­ழு­வின் வெற்றி வாய்ப்பு பறி­போ­னது.

இம்­மாத தொடக்­கத்­தில் எ­ஃப்ஏ கிண்ண இறு­திப் போட்­டியிலும் ஆர்­ச­னல் வென்­றது குறிப்­பி­டத்­தக்­கது.