நாயகிகள் ஓட்டம்

1 mins read
a7482891-c607-4e78-a0bf-0ccfa1f195ac
படம்: தமிழக ஊடகம் -

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இது இரண்டு நாயகிகளைக் கொண்ட கதை என்பதால், பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு.

முதலில் 'பிசாசு' படத்தில் நாயகியாக நடித்த பிரயாகா ஒப்பந்தமானார்.

ஆனால் அவர் சில காரணங்களால் படத்திலிருந்து விலகவே, சாயிஷா ஒப்பந்தமானார்.

தற்போது அவரும் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரயகா ஜெய்ஷ்வால் ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகியாக பூர்ணா நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்