நியூசிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் குழுவில் 7வது வீரருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டது

நியூசிலாந்து சென்றிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தற்போது 7வது வீரருக்கு கொவிட்-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

அங்குள்ள பாகிஸ்தான் குழு மீண்டும் திங்கட்கிழமை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது வீரர்கள் அனைவரும் அவர்களது அறையிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முன்பு, போட்டிக்காக தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்பு, நியூசிலாந்துக்கு வந்த முதல் நாளில் மேற்கொண்ட பரிசோதனையில் பாகிஸ்தான் வீரர்கள் அறுவருக்கு கொவிட்-19 இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தானிலிருந்து கிளம்பியபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லை எனத் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

நியூசிலாந்துக்குச் செல்வோர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் குழுவைச் சேர்ந்த 53 பேருக்கும் திங்கட்கிழமை மீண்டும் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் குழுவுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக நியூசிலாந்தின் சுகாதாரத்துரை தலைமை இயக்குநர் ஆஷ்லே புளூம்ஃபீல்டு தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!