ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வரலாறு படைத்த இந்தியா

1 mins read
e1d8c05c-f341-4e5c-8907-115b6ef5d43a
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்று தொடரையும் கைப்பற்றியது. படம்: சமூக ஊடகம் -

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வரலாற்று வெற்றியைப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இன்று 328 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட் 89 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் 'பார்டர் - கவாஸ்கர்' கிண்ணத்தை இந்தியா தக்க வைத்துள்ளது.

கிண்ணத்தைப் பெற்றதும் அதை இந்திய அணியின் மிக இளம் வீரரான நடராஜனிடம் கொடுத்து அழகு பார்த்தார் அணித் தலைவர் ரகானே. பின்னர் இந்திய வீரர்கள் தேசியக் கொடியுடன் திடலில் வலம் வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்