கிளோப்: லிவர்பூல் முகத்தில் ஓங்கி விடப்பட்ட குத்து

லிவர்­பூல் தொடர்ந்து 68 ஆட்­டங்­களில் வெற்றி பெற்று வந்த சாத­னையை நேற்று அதி­காலை பர்ன்லி குழு முடி­வுக்கு கொண்டு வந்­தது. லிவர்­பூல் தனது சொந்த மைதா­னத்­தில் 0-1 என பர்ன்­லி­யி­டம் தோல்வி கண்­டதை, “முகத்­தில் ஓங்கி விடப்­பட்ட குத்து,” என லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளோப் வர்­ணித்­துள்­ளார். எனி­னும் அதற்­கான முழுப் பொறுப்பை தான் ஏற்­றுக்­கொள்­வ­தாக அவர் கூறி­னார்.

பிரி­மி­யர் லீக் தர­வ­ரி­சைப் பட்­டி­ய­லில் முதல் நிலை­யில் இருக்­கும் மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­வை­விட ஆறு புள்­ளி­கள் குறை­வா­கப் பெற்றுள்ள லிவர்­பூல் அணி ஐந்து ஆட்­டங்­களில் வெற்றி பெற முடி­யா­மல் தவித்து வரு­கிறது.

“இது கடு­மை­யான நிலை, விளக்­கிக் கூற முடி­யாத ஒன்று. நாம் நினைப்­பது நடக்­க­வில்லை என்­றால், முயற்சியை மேலும் மேலும், கடி­ன­மாக, விடா­மல் தொடர்ச்­சி­யாக, ெசய்ய வேண்­டும்.

“இந்த ஆட்­டத்­தில் தோற்­கா­மல் இருப்­பது அவ்­வ­ளவு கடி­னமா­ன வேலை இல்லை, அப்­ப­டி­யும் தோற்று­விட்டோம்,” என்று அவர் புலம்­பி­னார்.

நேற்றைய ஆட்­டம் முடிய ஏழு நிமி­டங்­களே உள்ள நிலை­யில், லிவர்­பூல் கோல்­காப்­பா­ளர் அலி­சன் கோல் எல்­லைக்­குள் பர்ன்லி குழு­வின் ஆஷ்லி பார்ன்ஸை தடுக்­கி­விட்­டார். அதில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்­ப­டுத்தி பார்ன்ஸ் கோல் போட லிவர்­பூ­லின் வெற்­றிப் பய­ணம் முடி­வுக்கு வந்­தது.

நட்­சத்­திர முன்­னணி ஆட்­டக்­கா­ரர்­க­ளான முக­மது சாலா­வை­யும் ராபர்ட்டோ ஃபெர்மி­னோ­வை­யும் தொடக்க வீரர்­க­ளாக கள­மி­றக்­காத கிளோப், மற்­றோர் தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ர­ரான டிவோக் ஒரிகி மீது நம்­பிக்கை வைத்து அவ­ரைக் கள­மி­றக்­கி­னார். ஆனால் அவரோ கோல் போடக் கிடைத்த ஒரு சந்­தர்ப்­பத்தை வீண­டித்­தார்.

இது பற்­றிக் கூறிய கிளோப், “இது என்­னு­டைய தவ­று­தான், வேறெ­து­வும் இல்லை. இனி சரி­யான முடி­வு­களை எடுப்­ப­து­டன், சரி­யாக விளை­யாட வேண்­டும்,” என்று விளக்­கி­னார்.

பின்­னர் மாற்று ஆட்­டக்­கா­ரர்­க­ளாக கள­மி­றங்­கிய சாலா­வும் ஃபெர்மி­னோ­வும் ஆட்­டத்­தின் போக்கை மாற்­றத் தவ­றி­னர். சாலா உைதத்த பந்தை பர்ன்லி கோல்­காப்­பா­ளர் வலைக்­குள் புகா­மல் தடுத்­தார். ஃபெர்மினோ தமக்­குக் கிடைத்த வாய்ப்பை கோல் கம்­பத்­தின் மீது உதைத்து வீண­டித்­தார்.

இந்த ஆட்­டத்­துக்கு முன் தமது குழு வெற்றி பெற தவிப்­பது தமக்கு கவ­லை­ய­ளிக்­க­வில்லை என்று கூறிய கிளோப்­புக்கு தற்­பொ­ழுது உண்­மை­யி­லேயே ஒரு பெரிய பிரச்­சினை உரு­வா­கி­யி­ருப்­ப­தாக பிபிசி ெசய்­தித் தக­வல் கூறு­கிறது.

இந்த ஆட்­டம் பற்­றிக் கருத்­துை­ரைத்த பர்ன்லி குழு நிர்­வாகி, ஷோன் டைக், “நாங்­கள் ஆட்­டத்­தின் அடிப்­படை அம்­சங்­களில் கவ­னம் செலுத்­தி­னோம். மிக­வும் கடுைம­யாக விளை­யாட வேண்­டி­யி­ருந்­தது, அதோடு இந்த மாதிரி ஆட்­டங்­களில் கவ­னத்தை சித­ற­வி­டா­மல், கட்­டுக்­கோப்­பு­டன், சோர்­வுக்கு இடம் கொடுக்­கா­மல் விளை­யாட வேண்­டும்.

“எங்­க­ளுக்கு அரு­மை­யான வாய்ப்புக் கிடைத்­தது, அதைப் பெற நாங்­கள் விடா­மல் முயற்சி செய்­தோம். ஆனால், எது எப்­ப­டியோ, முத­லில் காற்­பந்து ஆட்ட அடிப்­படை அம்­சங்­களில் கவ­னம் வேண்­டும். அதை எங்­கள் வீரர்­கள் சிறப்­பா­கச் செய்­த­னர்,” என்று பெரு­மி­தத்­து­டன் விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!