சென்னை டெஸ்ட்: ஜோ ரூட் இரட்டைச் சதமடித்து அசத்தல்

சென்னை டெஸ்ட்: ஜோ ரூட் இரட்டைச் சதமடித்து அசத்தல்

1 mins read
a8b78312-4101-4968-bae6-4c64fb10dc24
-

சென்னையில் நடைபெற்று வரும் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட் இரட்டைச் சதமடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணி நேற்று பந்தடிப்பைத் தேர்ந்தெடுத்து. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட் இழந்து 263 ஓட்டங்களை எடுத்து இருந்தது. முதல் நாள் ஆட்டத்திலேயே ஜோ ரூட் சதமடித்துவிட்டார்.

இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜோ ரூட்டுடன் பென் ஸ்டோக்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இருவரின் கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதில் ஸ்டோக்ஸ் விரைவாக 82 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரூட் 200 ஓட்டங்களைக் கடந்தார்.

தமது 100வது டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.