டெண்டுல்கரின் மகன் தேர்வு குறித்து விளக்கம்

இந்­தி­ய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) கிரிக்­கெட் போட்­டி­கள் ஏப்­ரல், மே மாதங்­களில் நடை­பெ­று­வது வழக்­கம். இந்த ஆண்­டில் 14வது ஐபி­எல் போட்­டி­யில் பங்­கேற்று ஆட­வி­ருக்­கும் விளை­யாட்­டா­ளர்­க­ளுக்­கான ‘மினி’ ஏலம் நேற்று முன்­தி­னம் சென்­னை­யில் நடை­பெற்­றது.

ஏலத்­திற்­கான பட்­டி­ய­லில் 164 இந்­தி­யர்­கள் உள்­பட 292 வீரர்­கள் இடம்­பெற்று இருந்­த­னர். ஏல இறு­தி­யில் 22 வெளி­நாட்­ட­வர் உள்­ளிட்ட 57 வீரர்­கள் விலை போனார்­கள். 8 ஐபி­எல் அணி­களும் இவர்­களை ரூ.143 கோடியே 69 லட்­சத்­துக்கு வாங்­கின.

தென்­ஆப்­பி­ரிக்க ‘ஆல்­ர­வுண்­டர்’ கிறிஸ் மோரிஸ் அதிகத் தொகைக்கு ஏலம் போனார். அவரை ராஜஸ்­தான் ராயல்ஸ் அணி ரூ.16.25 கோடிக்கு எடுத்­தது. இதற்கு முன்பு யுவ­ராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலம் போனதே சாத­னை­யாக இருந்­தது. அதை கிறிஸ் மோரிஸ் முறி­ய­டித்­தார். அவ­ருக்­கான அடிப்­படை விலை ரூ.75 லட்­சம் ஆகும்.

இவ­ருக்கு அடுத்­தப­டி­யாக நியூ­சி­லாந்து வீரர் கைல் ஜேமி­சனை ரூ.15 கோடிக்கு ராயல் சேலஞ்­சர்ஸ் பெங்­க­ளூரு அணி வாங்­கி­யது. ஆஸ்­தி­ரே­லிய அதி­ரடி பந்தடிப்பாளர் மேக்ஸ்­வெல் ஏலத்­தில் 3வது இடத்­தைப் பிடித்­தார். அவரை பெங்­க­ளூரு அணி ரூ.14.25 கோடிக்கு எடுத்­தது.

கிருஷ்­ணப்பா கௌதம் இந்த ஏலத்­தில் புதிய சாதனை படைத்­தார். அவ­ருக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட விலை ரூ. 20 லட்­சம்­ என்றபோதி லும் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு அவரை எடுத்­தது. இதன் மூலம் ஐபி­எல் வர­லாற்­றில் அனைத்­து­ல­கப் போட்­டி­யில் விளை­யா­டாத வீரர்­களில் அதி­கத் தொகைக்கு ஏலம் போன­வர் என்ற சாத­னையை அவர் படைத்­தார்.

2018 ஏலத்­தில் குருணால் பாண்டியா ரூ. 8 கோடியே 80 லட்­சத்­துக்கு ஏலம் போனதே அதி­க­பட்­ச­மாக இருந்­தது. அதன் பிறகு அவர் அனைத்­து­ல­கப் போட்­டி­களில் விளை­யா­டி­னார்.

தமி­ழக வீரர்­களில் ஷாருக்­கான் அதி­கத் தொகைக்கு ஏலம் போனார். அவரை பஞ்­சாப் அணி ரூ.5.25 கோடிக்கு எடுத்­தது. இதர தமி­ழக வீரர்­க­ள் ஹரி நிஷாந்த்தை சென்னை அணி­யும் சித்­தார்த்தை டெல்லி அணி­யும் தலா ரூ.20 லட்­சத்­துக்கு எடுத்­தன.

கடைசி வீரராக சச்­சின் டெண்­டுல்­க­ரின் மகன் அர்­ஜுன் டெண்­டுல்­கர் (படம்) ஏலம் விடப்­பட்­டார். அவரை அடிப்­படை விலை­யான ரூ.20 லட்­சத்­துக்கு மும்பை இந்­தி­யன்ஸ் அணி வாங்­கி­யது. அத்­து­டன் ஏலம் முடி­வ­டைந்­தது.

சச்­சின் மகன் என்­ப­தற்­காக ஐபி­எல் போட்­டிக்கு அர்­ஜுன் ஏலம் எடுக்­கப்­பட்­டுள்­ளாரா என்று கேள்வி எழுந்­தது. அதற்கு மும்பை இந்­தி­யன்ஸ் அணி­யின் பயிற்­றுவிப்பாளர் மகேலா ஜெயவர்த்­தன பதில் அளிக்­கை­யில், “முழுக்க முழுக்க திற­மை­யின் அடிப்­படையிலேயே அவர் வாங்­கப்­பட்­டுள்­ளார்.

“அர்­ஜுன் அணி­யில் இணை­வது அணிக்கு நல்­லது. துடிப்­பான இளை­ஞர் அவர். மும்பை அணிக்கு ஆடி­னார். தற்­போது மும்பை இந்தி யன்­ஸுக்கு தேர்வு ஆகி­யுள்­ளார்,” என்­றார் அவர்.

கிரிக்­கெட் உல­கில் கொடி கட்டிப் பறந்த சச்­சின் டெண்­டுல்­கர் 2013ஆம் ஆண்டு அனைத்­து­ல­கப் போட்­டி­களில் இருந்து ஓய்வு­ பெற்­றார். அந்தப் போட்டிகளில் நூறு சதங்­களை அடித்த சாதனை யாளர் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!