இணையத்தில் வேகமாகப் பரவிவரும் டோனியின் படம்

1 mins read
973da500-25db-4b80-9737-94745af35864
பௌத்த துறவிபோல ஆடையணிந்து தலையை மொட்டை அடித்துக்கொண்டு இருக்கும் டோனியின் புகைப்படம் வெளியானது. படம்: இந்திய ஊடகம் -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனியின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த டோனி அனைத்துலகப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவராக இருக்கும் அவர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளார். இதற்காக அவர் தீவிரப் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பௌத்த துறவிபோல ஆடையணிந்து தலையை மொட்டை அடித்துக்கொண்டு இருக்கும் டோனியின் புகைப்படம் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இது ஒரு நிறுவனத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக எடுக்கப்பட்ட படம் என்பது தெரியவந்தது. இதையடுத்து டோனியின் புதிய தோற்றமுள்ள புகைப்படத்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் தற்போது இந்தப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

குறிப்புச் சொற்கள்