மான்செஸ்டர் சிட்டியை புரட்டிப்போட்ட லீட்ஸ்

மான்செஸ்டர்: நேற்று முன்­தி­னம் மான்ெசஸ்­டர் சிட்டி குழு­வும் லீட்ஸ் குழு­வும் மோதிய காற்­பந்­தாட்­டத்­தில் ஆட்­டம் முடி­யும் தறு­வா­யில் லீட்ஸ் குழு போட்ட இரண்­டா­வது கோலால் மான்­செஸ்­டர் சிட்டி குழு 1-2 என தோல்­வி­யைத் தழு­வி­யது.

ஆட்­டம் தொடங்­கி­ய­தி­லி­ருந்தே லீட்ஸ் குழு­வின் முனைப்­பான விளை­யாட்­டில் திக்­கு­முக்­கா­டியது மான்­செஸ்­டர் சிட்டி.

ஆட்­டத்­தின் 42வது நிமி­டத்­தில் லீட்­ஸின் தற்­காப்பு வீர­ரான டல்­லஸ் என்­ப­வர் கோல் போட்டு தமது குழு­வுக்கு முன்­னிலை பெற்­றுத் தந்­தார்.

ஆனால் முதல் பாதி ஆட்­டம் முடி­யும் முன்­னரே லீட்ஸ் குழு­வின் தலைவரான லியம் கூப்­பர் என்­ப­வர் சிட்­டி­யின் கேப்­பி­ரி­யல் ஜேசுஸ் என்­ப­வ­ரி­ட­மி­ருந்து பந்­தைப் பெறும் முயற்­சி­யில் அவர் மீது கடு­மை­யாக மோத, அவர் ஆட்­டத்­தி­லி­ருந்து ெவளி­யேற்­றப்­பட்­டார்.

குழு­வின் கேப்­டனை இழந்த நிலை­யில் மீதம் உள்ள பத்து வீரர்­க­ளைக் ெகாண்டு லீட்ஸ் குழு முழு மூச்­சான தற்­காப்பு விளை­யாட்­டில் கவ­னம் செலுத்­தி­யது.

இருப்­பி­னும், சிட்­டி­யின் ஃபெரன் டோரஸ் என்­ப­வர் லீட்ஸ் குழு­வின் தற்­காப்பு அரணை உடைத்து ஆட்­டத்­தின் 76ஆம் நிமி­டத்­தில் கோல் போட சிட்டி குழு ஆட்­டத்தை சம­நிலை செய்­தது.

இதைத் தொடர்ந்து எப்­ப­டி­யா­வது வெற்றி பெற்­று­விட வேண்­டும் என்ற முனைப்­பில் மான்­செஸ்­டர் சிட்டி வீரர்­கள் கொத்­துக் கொத்­தாக முன்­னே­றித் தாக்க, அவ்­வப்­பொ­ழுது எதிர்த் திசை­யில் பந்தை செலுத்தி சிட்டி குழு­வுக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யது லீட்ஸ் குழு.

ஆட்­டத்­தின் கூடு­தல் நேரத்­தில் தமது பாதை­யில் வந்த பந்தை எடுத்து சிட்டி கோல் நோக்கி ஓடிய டல்­லஸ் அனை­வ­ரை­யும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கும் வகை­யில் லீட்­ஸின் இரண்­டா­வது கோலைப் போட்டு மான்­செஸ்­டர் சிட்டி பத்து பேர் மட்­டுமே கொண்ட லீட்ஸ் குழு­வி­டம் தோற்­கும் நிலைக்கு அதைத் தள்­ளி­யது.

லீட்ஸ் அணிக்­காக இரு கோல்­க­ளை­யும் போட்ட டல்­லஸ், "இதில் கிடைத்த வெற்றி பெரு

மதிப்­புக்கு உரி­யது.

"ஏனெ­னில் ஆட்­டம் முழு­வ­தும் சிட்டி குழு ஆதிக்­கம் செலுத்­தி­யது. இந்­நி­லை­யில், வெற்றி பெற நாங்­கள் பெரு முயற்சி மேற்­கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. இதில் எங்­கள் குழு ஒரு புரட்­சியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய அள­வுக்கு செயல்­பட்­டது," என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார்.

அணி நிர்­வாகி பெப் கார்­டி­யோலா, "எங்­கள் குழு­வி­னர் தவ­று­க­ளைச் செய்­தா­லும் கோல் போடு­வ­தற்கு பல வாய்ப்­பு­கள் கிடைத்­தன. ஆயி­னும் வாய்ப்­பு­களை நழு­வ­விட்­டோம்," என்­றார்.

எனினும் இந்­தத் தோல்வி, சிட்­டி­யின் வெற்­றிப் பய­ணத்தைத் தடுத்து நிறுத்திவிடாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!