சென்னை பந்துவீச்சை சிதறடித்த டெல்லி

சென்னை பந்துவீச்சை சிதறடித்த டெல்லி

2 mins read

மும்பை: சனிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற ஐபி­எல் போட்­டி­யில் டெல்லி அணி­யி­டம் சென்னை அணி தோல்வி அடைந்­தது.

2021 ஐபி­எல் பரு­வத்­தின் இரண்­டா­வது லீக் போட்­டி­யில் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யும் டெல்லி கேபி­டல்ஸ் அணி­யும் விளை­யா­டின. மும்­பை­ வான்கடே திடலில் நடை­பெற்ற இந்த போட்­டி­யில் பூவா தலை­யா­வில் வென்ற டெல்லி அணி­யின் தலை­வர் ரிஷப் பந்த் பந்­து­வீச்­சைத் தேர்வு செய்­தார்.

அத­னால் டோனி தலை­மை­யி­லான சென்னை அணி முத­லில் பந்­த­டித்து 20 ஓவர்­களில் 7 விக்­கெட் இழப்­பிற்கு 188 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது. சென்னை அணிக்­காக தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கிய ருது­ராஜ் கெய்க்­வாட்­டும் டுபி­ளே­ஸி­ஸும் களம் இறங்­கி­னர். சென்னை அணி 7 ஓட்­டங்­கள் எடுத்த நிலை­யில் இரு­வ­ரும் அடுத்­த­டுத்து விக்­கெட்­டு­களை இழந்து அதிர்ச்­சி­யூட்­டி­னர்.

இருப்­பி­னும் மொயின் மற்­றும் சுரேஷ் ரெய்னா மூன்­றா­வது விக்­கெட்­டிற்கு 53 ஓட்­டங்­க­ளைச் சேர்த்­த­னர். இரு­வ­ரும் ஓட்­டங்­க­ளைக் குவித்து அதி­ரடி ஆட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் மொயின் அலி 36 ஓட்­டங்­க­ளி­லும் ராயுடு 23 ஓட்­டங்­க­ளி­லும் ஆட்­டம் இழந்­த­னர். ரெய்னா 54 ஒட்­டங்­கள் எடுத்த நிலை­யில் ஆட்­ட­மி­ழந்­தார். டோனி ஓட்­டம் எது­வும் எடுக்­கா­ம­லேயே ஏமாற்­றத்­து­டன் பெவி­லி­யன் திரும்­பி­னார்.

சாம் கரண் மற்­றும் ஜடேஜா இரு­வ­ரும் 51 ஓட்­டங்­க­ளைக் குவித்­த­னர். முடி­வில் சென்னை அணி 188 ஓட்­டங்­கள் எடுத்­தி­ருந்­தது. அந்த இலக்கை விரட்­டிய டெல்­லிக்கு பிருத்வி ஷா மற்­றும் தவான் நல்ல தொடக்­கத்­தைக் கொடுத்­த­னர். இரு­வ­ரும் 138 ஓட்­டங்­கள் எடுத்த நிலை­யில் பிருத்வி ஷா 72 ஓட்­டங்­களில் ஆட்­ட­மி­ழந்­தார். தொடர்ந்து ரிஷப் பந்த் களத்­திற்கு வந்­தார். தவான் 54 பந்­து­களில் 85 ஓட்­டங்­க­ளைக் குவித்து ஆட்­ட­மி­ழந்­தார். எல்­பி­ட­பிள்யூ முறையில் அவரை தாக்­கூர் வெளி­யேற்­றி­னார்.

சென்னை அணி­யின் பந்­து­வீச்சை டெல்லி தொடக்க வீரர்­கள் நாலாபுறமும் சிதறடித்தனர். தீபக் சாஹர், சாம் கரண், தாக்­கூர், ஜடேஜா, மொயின் அலி, பிராவோ என ஆறு பேர் பந்­து­வீ­சி­யும் அணிக்­குத் தேவை­யான நேரத்­தில் விக்­கெட்டை வீழ்த்த முடி­ய­வில்லை.

இறு­தி­யில் 8 பந்­து­கள் மீத­மி­ருக்­கை­யில் டெல்லி அணி 3 விக்­கெட் இழப்­பிற்கு 190 ஓட்­டங்­க­ளைக் குவித்து 7 விக்­கெட் வித்­தி­யா­சத்­தில் வென்­றது.

சென்னை அணி முதல் போட்­டி­யி­லேயே தோல்வி அடைந்­தது அதன் ரசி­கர்­க­ளுக்கு வருத்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது.