பரதம் முதல் படகோட்டம் வரை: நேத்ரா குமணனின் வெற்றிப் பயணம்

சென்னை: படகோட்டத்தில் சிறந்து விளங்கினாலும் பரதநாட்டியம் மூலம் பலன்கள் பல பெற்றதாகக் கூறியுள்ளார் சென்னையைச் சேர்ந்த இளம் வீராங்கனை நேத்ரா குமணன்.

படகு ஓட்­டும் போட்­டிக்­காக ஒலிம்­பிக் போட்­டிக்­குத் தகுதிபெற்ற முதல் இந்­திய வீராங்­கனை என்­கிற பெரு­மை­யை இவர் பெற்­றுள்­ளார். இதற்கு முன்பு படகு ஓட்­டும் போட்­டி­யில் ஒலிம்­பிக் போட்­டிக்­குத் தகுதி பெற்ற ஒன்­பது பேரும் ஆண்­களே.

வரும் ஜூலை மாதம் ஜப்­பா­னில் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் நடை­பெற உள்­ளன. ஆசிய நாடு­கள் சார்­பில் பாய்­மர பட­குப் போட்­டி­யில் பங்­கேற்­ப­தற்­கான தகு­திச் சுற்­றுப் போட்­டி­கள் ஓமா­னில் நடை­பெற்­ற­போது லேசர் ரேடி­யல் மக­ளிர் ஒற்­றை­யர் பிரி­வில் பங்­கேற்ற நேத்ர, 22, முதல் இடம் பிடித்து புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் ஒலிம்­பிக் போட்­டி­யில் விளை­யா­டும் வாய்ப்­பைப் பெற்­றார்.

சிறு வய­தி­லி­ருந்தே பட­கோட்­டும் ஆர்­வம் கொண்­டி­ருந்த நேத்ரா, 2014, 2018 ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் இந்­தியா சார்­பா­கப் பங்­கேற்­றார். 2014 இன்­சி­யான் ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­யில் பங்­கேற்­ற­போது இவ­ருக்கு வெறும் 16 வய­து­தான். அப்­போது ஏழாம் இடம் பெற்­ற­வர், 2018 ஜகார்த்தா தொட­ரில் ஐந்­தாம் இடத்துக்கு முன்னேறினார். மையா­மி­யில் நடந்த உல­கக் கிண்ணப் போட்டியில் வெண்­க­லம் வென்று, உல­கக் கிண்ண பட­கோட்­டு­த­லில் பதக்­கம் வென்ற முதல் இந்­தி­யப் பெண் என்ற சாத­னை­யை­ப் படைத்­தார் நேத்ரா.

இப்­படி தொடர்ந்து தன் செயல்­பாட்­டில் முன்­னேற்­றம் காட்­டி­வந்­த­வர், இப்­போது உல­கின் மிகப்­பெ­ரிய விளை­யாட்­டுத் தொட­ருக்­குத் தேர்­வாகி சரித்­தி­ரம் படைத்­தி­ருக்­கி­றார்.

தற்­போது இயந்­தி­ரப் பொறி­யி­யல் இரண்­டாம் ஆண்டு படித்­து­வ­ரும் நேத்ரா, பர­த­நாட்­டி­யத்தை ஆர்­வ­மா­கக் கற்­றுக்­கொண்­ட­வர். பட­கோட்­டத்­தைக் கற்­றுக்­கொள்ள பர­த­நாட்­டிய வகுப்­பு­க­ளைக் கைவி­ட­வேண்டி வந்­த­தாக 'இந்­தி­யன் எக்ஸ்­ பி­ரஸ்' செய்­தித்­தா­ளி­டம் அவர் தெரி­ வித்­தார். "பர­த­நாட்­டி­யம் எனக்கு ஒழுக்­கம், கடின உழைப்பு, அர்ப்­ப­ணிப்பு போன்ற பல நல்ல அம்­சங்­க­ளைக் கற்­றுத் தந்­துள்­ளது. இன்று வரை எனக்கு உத­வக்­கூ­டிய பல விஷ­யங்­கள் நாட்­டி­யம் மூல­மா­கக் கிடைத்­தவை," என்று கூறும் அவர், அல­மேலு வள்ளி என்­னும் நாட்­டிய ஆசி­ரி­ய­ரி­டம் ஆறாண்­டு­கள் பரதம் கற்­ற­வர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!