கடான்ஸ்க்: இந்தப் பருவ காற்பந்து விளையாட்டுகளில் ஒரு கிண்ணமாவது வெல்லலாம் என்று நினைத்திருந்த இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் ேநற்று கலைந்தது.
நேற்று அதிகாலை போலந்தின் கடான்ஸ்ஸ் நகரில் நடைபெற்ற யூரோப்பா கிண்ணக் காற்பந்து இறுதிப் போட்டியில் கூடுதல் நேர விளையாட்டுக்குப் பின் பெனால்டி கோல்களில் வில்லாரியால் குழு 11-10 என வெற்றி பெற்றது.
இரு குழுக்களின் அனைத்து வீரர்களும் கோல்கள் போட யுனைடெட்டின் கோல்காப்பாளர் ேடவிட் ட கியா தமக்கு வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பை வீணடித்தார்.
இங்கிலாந்தின் ஆர்சனல் குழுவின் முன்னைய நிர்வாகியான உனாய் எமிரே நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள வில்லாரியால் குழுவுக்கு இந்த வெற்றியின் மூலம் காற்பந்து உலகில் கிடைத்த முதல் விருது இது என்று கூறப்படுகிறது.
இரு குழுக்களுமே இந்தப் போட்டியில் சுவாரஸ்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குறைகூறல் ஒருபுறமிருக்க, ஆட்டத்தின் முடிவு, பெனால்டி கோல்களால் வில்லாரியால் பெற்ற வெற்றி, அனைவரையும் பரவசப்
படுத்தியது என்று காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால், சரியாய் 22 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் மாற்று ஆட்டக்காரராக களமிறங்கி யுனைடெட்டுக்கு வெற்றியும் மங்காத புகழையும் தேடித் தந்த தற்போதைய மான்செஸ்டர் யுனைடெட் குழுவின் நிர்வாகி ஒலே குனார் சோல்சியாருக்கு நேற்றைய ஆட்டம் பெருத்த ஏமாற்றத்தையே பரிசாக அளித்தது.
பல பெரிய வீரர்களைக் கொண்ட யுனைடெட் குழு வெற்றி பெறக்கூடிய வகையில் விளையாடவில்லை என்று பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது.
யுைனடெட் குழு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆட்டத்தைத் தொடங்கவில்லை என்றும் எளிதாகத் தடுத்திருக்க வேண்டிய பந்தை கோலாக வில்லாரியாலுக்கு பரிசளித்தது என்றும் கூறப்படுகிறது.
பின்னர், இரண்டாம் பாதி ஆட்டத்தில் ரேஷ்ஃபர்ட்டின் பாதையில் வந்த பந்து தடுக்கப்பட்டு கவானிக்கு வந்ததால் அவர் கோல் போட ஆட்டம் சமநிலை கண்டது.
ஆனால், அதன் பின் ஆட்டத்தில் மெருகேற்றி வெற்றி பெற யுனைடெட் முயற்சி செய்யவில்லை என்றே தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, ெபனால்டி வாய்ப்புகளுக்கு யுவான் மாட்டாவையும் அலெக் டெல்லஸையும் மாற்று ஆட்டக்காரர்களாக களமிறக்கிய சோல்சியார், ஏனோ ட கியாவை மாற்றி பெனால்டி வாய்ப்புகளை கோல் புகாமல் தடுக்கக்கூடிய ஹென்டர்சனைப் களமிறக்காதது விந்தையிலும் விந்தை.
இதில் 2014ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் யுனைடெட்டின் முன்னாள் நிர்வாகியும் அப்போதைய நெதர்லாந்து நாட்டு நிர்வாகியுமான லுவி வான் ஹால் பெனால்டி வாய்ப்புகளுக்காகவே டிம் குருல் என்ற கோல்காப்பாளரை இறக்கி அவர் தமது நாட்டுக்கு வெற்றி தேடித் தந்த சாமர்த்தியத்தை பலர் இன்றும் நினைவுகூரு
கின்றனர்.

