கடான்ஸ்க்: 'காற்பந்து ஆட்டம் என்பது கோல் போடும் முயற்சியில் பந்தை நாம் உதைக்கும் அந்த ஒரு நொடிப் பொழுதில் சில சமயம் வெற்றி அல்லது தோல்வி முடிவாகிறது.
"நாங்கள் விளையாட்டில் சோபிக்கவில்லை. முழுத் திறமையையும் வெளிப்படுத்தி எங்கள் குழு ஆடவில்லை.
"ஆட்டம் சரியாகத்தான் தொடங்கியது, அதில் அவர்கள் ஒரு கோல் போட்டனர்.
"அவர்கள் கோல் வலையை நோக்கி அந்த ஒரு முறைதான் பந்தை உதைத்தனர்.
"அந்த கோல் எங்களுக்கு பெருத்த ஏமாற்றமே.
"அதன் பின், நாங்களும் தொடர் முயற்சியில் ஈடுபட்டு பதிலுக்கு ஒரு கோல் போட்டோம்.
"அதைத் தொடர்ந்து நாங்கள் திட்டமிருந்தபடி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த தவறிவிட்டோம்," என்று மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி சோல்சியார் பிடி ஸ்போர்ட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மான்செஸ்டர் யுைனடெட் குழு கடந்த 2017ஆம் ஆண்டில் முன்னாள் நிர்வாகி ஜோசெ மொரின்யோவின் கீழ் யூரோப்பா லீக் கிண்ணத்தை வென்றது.
அதன்பின் நேற்று அதிகாலை அதேபோல் யூரோப்பா லீக் கிண்ணப் போட்டியில் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கேற்றாற்போல் இரண்டாம் பாதி ஆட்டத்தில் யுனைடெட்டின் எடின்சன் கவானி அந்த கோலைப் போட்டதும் பலரும், யுனைடெட் பல முறை பின்னிலையிலிருந்து வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்து, இறுதியில் வெற்றி பெற்றுவிடும் என்றே நம்பியிருந்தனர்.

