எமிரே: குறை-கூற முடி-யாத வீரர்-கள்

எமிரே: குறை-கூற முடி-யாத வீரர்-கள்

1 mins read

கடான்ஸ்க்: மான்­செஸ்­டர் யுனை­டெட்டை வீழ்த்தி யூரோப்பா கிண்­ணத்தை வென்ற வில்­லா­ரி­யால் நிர்­வாகி உனாய் எமிரே தமது குழு­வி­னர் குறை­கூற முடி­யாத வீரர்­கள் என வர்­ணித்­துள்­ளார்.

இங்­கி­லாந்­தின் மான்­செஸ்­டர் யுனை­டெட்டை பெனால்டி கோல்­கள் மூலம் 11-10 என்ற கோல் எண்­ணிக்­கை­யில் வெற்றி கொண்­டது வில்­லா­ரி­யால்.

அதில் ரியால் குழு­வின் கோல்­காப்­பா­ள­ரும் தமது பங்­குக்கு கோல் போட்டு அசத்­தி­னார்.

பின்­னர் அவர் மீண்­டும் கோல்­காப்­பா­ள­ராக மாறி யுனை­டெட் கோல்­காப்­பா­ளர் ட கியா­வின் பெனால்டி வாய்ப்பை எதிர்­கொள்­ளச் சென்­றார்.

அதை எதிர்­கொள்ள மட்­டுமா அவர் சென்­றார்.

இல்லையில்லை, ட கியா அடித்த பந்­தைத் தடுத்து தமது வில்­லா­ரி­யால் அணிக்கு கிண்­ணத்தை பெற்­றுத் தந்­தார்.

இது­பற்­றிக் கூறும் எமிரே, "யூரோப்பா கிண்ண ஆட்­டங்­களில் எங்­கள் வீரர்­கள், தொடக்க விநாடி முதல் குறை சொல்ல முடி­யா­த­படி செயல்­பட்­ட­னர்.

"சில நாட்­களில் மைதா­னத்­திற்கு நாங்­கள் காலை 6.00 மணிக்கே வந்­து­வி­டு­வோம். இதை எண்­ணும்­போது நாங்­கள் எடுத்­துக்­கொண்ட முயற்­சி­க­ளுக்கு நல்ல பலன் கிடைத்­துள்­ளது.

"அந்த மகிழ்ச்­சி­க­ர­மான தரு­ணங்­களை எண்­ணிப் பேசி­ய­துண்டு. இறு­திப் போட்­டிக்கு செல்­வது பெரு­மைக்­கு­ரி­யது. ஆனால், வெற்றி பெற­வில்லை என்­றால் முயற்சி சோகத்­தில் முடி­யும்.

"வெற்றி என்­பது முன்­னோக்­கிச் செல்­லும் ஒரு முக்­கி­ய­மான படி.

"இது­போன்ற வெற்­றித் தரு­ணங்­க­ளுக்­கா­கவே இந்­தத் தொழி­லில் இருக்­கி­றோம்.

"இந்த வெற்­றி­யின் மூலம் ரசி­கர்­கள் பல­ருக்கு மகிழ்ச்­சி­யைத் தந்­துள்­ளோம்," என்­றார்.