புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றியது. இதன் மூலம் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் வெற்றியாளர் போட்டியின் இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றது.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் வெற்றியாளர் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் நகரில் ஜூன் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த ஆட்டத்துக்கான விதிமுறைகளை அனைத்துலக கிரிக்கெட் மன்றம் வெளியிட்டுள்ளது.
"இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தாலோ ஒரே மாதிரியான வெற்றிப்புள்ளிகளைப் பெற்றாலோ இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படும்.
"ஐந்து நாள்களைத் தாண்டி கூடுதலாக ஒரு நாள் (ஜூன் 23) இந்த டெஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள்களில் மழை அல்லது வேறு காரணங்களால் ஆட்டம் தடைப்பட்டால் இழந்த நேரங்களை ஐந்து நாள்களுக்குள் முடிக்காவிட்டால், கூடுதல் நாள் பயன்படுத்தப்படும்.
"அதேநேரம் ஐந்து நாள்களிலும் முடிவு எட்டப்படாவிட்டால், முடிவுக்காக கூடுதல் நாளைப் பயன்படுத்த முடியாது.
"கூடுதல் நாளைப் பயன்படுத்துவது தொடர்பான முடிவை கடைசி நாளின் கடைசி ஒரு மணி நேரத்தின்போது நடுவர் அறிவிப்பார். ஆட்டத்தில் கிரேட் 1 டியூக்ஸ் பந்துகள் பயன்படுத்தப்படும்," என் பன புதிய விதிமுறைகள்.

