ரொனால்டோ செயலால் இழப்பைச் சந்தித்த கோக்க கோலா நிறுவனம்

யூரோ 2020 காற்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. 

இந்நிலையில், இத்தொடரின் போர்ச்சுகல் குழுவின் முதல் ஆட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் குழுவின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.

இருக்கையில் அமர்ந்த ரொனால்டோ தமக்கு முன்னாள் இருந்த மேசையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக்க கோலா குளிர்பான  போத்தல்களைப் பார்த்தார். 

உடனடியாக அந்த இரண்டு கோக்க கோலா போத்தல்களையும் எடுத்த அவர், அதை மேசையிலிருந்து நகர்த்தி வைத்தார். மேலும், தமக்கு அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து “தண்ணீர் குடியுங்கள்” என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. கோக்க கோலா குளிர்பானத்தை அகற்றிவிட்டு “தண்ணீர் குடியுங்கள்” என ரொனால்டோ அறிவுறுத்திய சில நிமிடங்களில் கோக்க கோலா நிறுவனத்தின் சந்தை மதிப்பு பெரும் சரிவை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. 

ரொனால்டோவின் இந்தச் செயலால் கோக்க கோலா நிறுவனத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.

யூரோ காற்பந்து தொடரில் முக்கிய விளம்பரதாரர்களில் ஒன்று கோக்க கோலா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!