மிலான்: யூரோ 2020 காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் இத்தாலியும் ஆஸ்திரியாவும் மோதுகின்றன.
இந்த ஆட்டம் சிங்கப்பூர் நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு இங்கிலாந்தின் வெம்ப்லி விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.
முக்கிய காற்பந்துப் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரியாவுக்கு எதிராக 13 ஆட்டங்களில் இத்தாலி களமிறங்கியுள்ளது.
அனைத்து ஆட்டங்களிலும் இத்தாலி வாகை சூடியது.
ஆகக் கடைசியாக 2008ஆம் ஆண்டில் நடைபெற்ற நட்புமுறை ஆட்டத்தில் இரு குழுக்களும்
சந்தித்தன.
அந்த ஆட்டத்தில் தரப்புக்கு இரண்டு கோல்களைப் போட்டு இரு குழுக்களும் சமநிலை கண்டன.
தற்போது இத்தாலி தொடர்ந்து 30 ஆட்டங்களில் தோல்வி அடையாமல் உள்ளது.
ஆஸ்திரியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் இத்தாலி வெற்றி பெற்றால் இதற்கு முன் இல்லாத நீண்ட வெற்றிப் பயணத்தை அது பதிவு செய்யும்.
அதுமட்டுமல்லாது, தொடர்ந்து பத்து ஆட்டங்களில் இத்தாலிக்கு எதிராக கோல்கள் போடப்படவில்லை.
இதைத் தொடர இத்தாலி கோல்காப்பாளர் ஜியான்லுயிகி டோன்
னரும்மா முனைப்புடன் உள்ளார்.
இத்தாலிக்கு எதிராக ஆகக் கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹாலந்து கோல் போட்டது.
இதற்கிடையே, இத்தாலிய அணியின் மத்தியதிடல்
ஆட்டக்காரரான மார்க்கோ வெராட்டி ஆஸ்திரியாவுக்கு சிம்மசொப்பனமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய கிண்ணக் காற்
பந்துப் போட்டிக்கு முன்பு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆறு மாதங்களுக்கு அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் போட்டிக்கு முன் குணமடைந்த 28 வயது வெராட்டி, முதல் சுற்று ஆட்டங்களில்
இத்தாலி சிறப்பாக விளையாடி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.
மத்தியதிடலில் வெராட்டி, ஜார்ஜினோ ஜோடியின் அபார ஆட்டம் காரணமாக இத்தாலியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று இத்தாலி அணியின் பயிற்றுவிப்பாளர் ராபர்ட்டோ மன்சினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் 1968ஆம்
ஆண்டில் நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மட்டுமே இத்தாலி மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.

