சவால்­மிக்க ஆட்­டத்தை எதிர்­பார்க்­கும் வேல்ஸ்

1 mins read
5373b8b6-b7d5-46ee-a9b2-f87f4c6023e0
முதல் சுற்று ஆட்டத்தில் துருக்கிக்கு எதிராக கோல் போட்ட வேல்ஸ் அணியின் ஏரோன் ரேம்சே (வலது) படம்: இபிஏ -

ஆம்ஸ்­டர்­டாம்: காலி­று­திச் சுற்­றுக்­குத் தகுதி பெற டென்­மார்க்-வேல்ஸ் ஆகிய அணி­க­ளுக்கு இடையே சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று நள்­ளி­ரவு கடு­மை­யான போட்டி நிலவ இருக்­கிறது. இந்த ஆட்­டம் ஹாலந்­தின் ஆம்ஸ்­டர்­டாம் நக­ரில் நடை­பெ­று­கிறது.

டென்மார்க் அதன் முதல் ஆட்­டத்­தில் பெரும் பின்­ன­டை­வைச் சந்­தித்­தது. அதன் மத்­தி­யதி­டல் ஆட்­டக்­கா­ர­ரான கிறிஸ்­டி­யன் எரிக்­ச­னுக்கு ஆட்­டத்­தின்­போது இத­ய செய­லி­ழப்பு ஏற்­பட்­டது. அதிர்ஷ்­ட­வ­ச­மாக அவர் உயிர் தப்­பி­னார்.

இந்­தப் பாதிப்­பி­லி­ருந்து மீண்ட டென்­மார்க், காலி­று­திச் சுற்­றுக்கு முந்­திய ஆட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றுள்­ளது. இந்­நி­லை­யில், டென்­மார்க்­கிற்கு எதி­ரான ஆட்­டம் சவால்­மிக்­க­தாக இருக்­கும் என்று வேல்ஸ் அணி­யின் தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் கோனர்ஸ் ராபர்ட்ஸ் தெரி­வித்­துள்­ளார்.

இருப்­பி­னும், வெற்றி பெற்று காலி­று­திச் சுற்­றுக்கு முன்­னேற தமது சக வீரர்­கள் முனைப்­பு­டன் இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

இன்­றைய ஆட்­டத்­தில் டென்­மார்க்­கிற்கு உல­கெங்­கும் உள்ள பல காற்­பந்து ரசி­கர்­கள் ஆத­ரவு அளிப்­பர் என்­றார் அவர். டென்­மார்க் வெற்றி பெறும் என்று பெரும்­பா­லா­னோர் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

"முதல் சுற்­றோடு எங்­கள்

பய­ணம் முடி­யும் என்று பலர்

நம்­பி­னர். அது தவறு என்­பதை நாங்­கள் நிரூ­பித்­து­விட்­டோம்," என்­றார் ராபர்ட்ஸ்.

இதற்­கி­டையே, முதல் சுற்று ஆட்­டத்­தில் ரஷ்­யாவை 4-1 எனும் கோல் கணக்­கில் பந்­தா­டிய டென்­மார்க், வேல்ஸ் அணிக்கு எதி­ரான இன்­றைய ஆட்­டத்­தி­லும் கோல் மழை பொழிய காத்­துக்­கொண்­டி­ருக்­கிறது.