சவுத்கேட்: இத்தாலி கடும் சவாலாக விளங்கும்

3 mins read

லண்­டன்: ஐரோப்­பிய கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் இறுதி ஆட்­டத்­துக்கு இங்­கி­லாந்­தும் இத்­தா­லி­யும் தகுதி பெற்­றுள்­ளன. இந்த ஆட்­டம் சிங்­கப்­பூர் நேரப்­படி வரும் திங்­கட்­கி­ழமை அதி­காலை 3 மணிக்கு இங்­கி­லாந்­தின் வெம்பிலி விளை­யாட்­ட­ரங்­கத்­தில் நடை­

பெ­றும்.

55 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு ஐரோப்­பிய கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டிக்­குத் தகுதி பெற்­றுள்ள இங்­கி­லாந்து, கிண்­ணத்­தைக் கைப்­பற்ற வேண்­டும் என்று முனைப்­

பு­டன் இருக்­கிறது.

அரை­யி­றுதி ஆட்­டத்­தில் டென்­மார்க்கை 2-1 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­திய இங்­கி­லாந்து, இறுதி ஆட்­டத்­தி­லும் வெற்றி பெற

வியூ­கம் வகுத்து வரு­கிறது.

சொந்த மண்­ணில் விளை­யா­டு ­வது அதற்கு சாத­க­மாக அமை­யக்­ கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆனால் இங்­கி­லாந்தை எதிர்த்­துக் கள­மி­றங்­கும் குழு சாதா­ர­ண­மா­ன­தல்ல. காற்­பந்து உல­கில் தடம் பதித்­துள்ள இத்­தா­லி­யும் ஐரோப்­பிய கிண்­ணத்­துக்­குக் குறி­வைத்­துள்­ளது.

அரை­யி­றுதி ஆட்­டத்­தில் அது ஸ்பெ­யி­னு­டன் மோதி­யது. ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் முடிந்­த­தால் பெனால்டி ஷுட்­அ­வுட் நடத்­தப்­பட்­டது. இதில் 4-2 எனும் கோல் கணக்­கில் மன்­சி­னி­யின் படை வாகை சூடி­யது.

இந்­நி­லை­யில், இத்­தா­லியை முறி­ய­டிப்­பது எளி­தல்ல என்­றும் அது கடு­மை­யான சவா­லாக விளங்­கும் என்­றும் இங்­கி­லாந்­தின் நிர்­வா­கி­யும் முன்­னாள் நட்­சத்­திர

வீர­ரு­மான கேரத் சவுத்­கேட் தமது அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"அரை­யி­று­தி­யில் வெற்றி பெற்­ற­தும் நாங்­கள் கொண்­டா­டி­னோம். இறுதி ஆட்­டத்­துக்கு முன்­னே­றி­

இ­ருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரி­யது. ஆனா­லும் இன்­னும் ஒரு தடைக்­கல் உள்­ளது.

"அது­தான் இத்­தாலி. இத்­தாலி மிக­வும் வலி­மை­மிக்க குழு­வா­கும். இப்­போட்­டி­யில் இத்­தாலிய ஆட்­டக்­கா­ரர்­கள் சிறப்­பாகச் செயல்­பட்டு வரு­கின்­ற­னர்.

"அனு­ப­வ­மிக்க தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர்­கள் அக்­கு­ழு­வுக்குப் பலம் சேர்க்­கின்­ற­னர்.

"இறுதி ஆட்­டம் விறு­வி­றுப்­பாக இருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை. அதைப் பார்ப்­ப­தற்கு அனை­வ­ரும் மிகுந்த ஆவ­லு­டன் காத்­துக்­

கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

"இறுதி ஆட்­டத்­தில் வெற்றி பெறு­வதே எங்­கள் இலக்கு. அதற்­காக நாங்­கள் தயா­ராகி வரு­கி­றோம். டென்­மார்க்­கிற்கு எதி­ரான ஆட்­டம் எங்­கள் ஆட்­டக்­கா­ரர்­களை உடல்­ரீ­தி­யா­க­வும் மன­ரீ­தி­யா­க­வும் களைப்­ப­டை­யச் செய்­துள்­ளது.

"நன்­றாக ஓய்வு எடுத்த பிறகு இறுதி ஆட்­டத்­துக்கு தயா­ரா­வோம். இத்­தா­லி­யின் நிலை­யும் எங்­க­ளைப் போன்றது­தான். ஆனால் அதற்குக் கூடு­த­லாக ஒரு­நாள் ஓய்வு கிடைத்­துள்­ளது," என்று சவுத்­கேட் கூறி­னார்.

கடந்த உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டிக்­குத் தகுதி பெறத் தவறிய இத்­தாலி, இம்­முறை ராபர்ட்டோ மன்­சி­னி­யின் நிர்­வா­கத்­தின்­கீழ் அபா­ர­மா­கச் செயல்­பட்டு வரு­கிறது. வலு­வான தற்­காப்பு அர­ணைக் கொண்­டுள்ள இத்­தா­லிக்கு எதி­ராக கோல் போடு­வது சிர­மம். அதே வேளை­யில், கோல் வேட்­டை­யில் இறங்­கும் வீரர்­க­ளை­யும் அது கொண்­டுள்­ளது. இரு குழுக்­களும் வலி­மை­மிக்­கவை என்­ப­தால் வெற்­றி­யா­ளரை முன்­னு­ரைப்­பது முடி­யாத காரி­ய­மாக இருக்­கிறது.

இத்­த­கைய சவால்­மிக்க ஆட்­டங்­களில் கோல் போட கிடைக்­கும் வாய்ப்­பு­களை நழு­வ­வி­டா­மல் பயன்­

ப­டுத்­திக்­கொள்­வதே வெற்­றிக்கு வித்­தி­டும். அது­மட்­டு­மல்ல, தற்­காப்­பில் கவ­னச் சித­றல்­கள் ஏற்­ப­டக்­கூ­டாது. அவ்­வாறு நேர்ந்­தால் கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் கிண்­ணம் பறி­போய்­வி­டும்.

எனவே, வலி­மை­யு­டன் இருந்­தால் மட்­டும் போதாது ஆட்­டத்­தின்­போது செயல்­படும் விதம் மிக­வும் முக்­கி­யம் என்­பதை அனு­ப­வம்­வாய்ந்த இவ்­விரு குழுக்­களும் நன்கு அறிந்­துவைத்துள்ளன.