கடுமையாகவிருக்கும் சீனாவின் வானிலை

கடுமையாகவிருக்கும் சீனாவின் வானிலை

1 mins read
836f64ea-eb6c-4f94-b7d3-89dd99bf3316
-

பெய்ஜிங் (ப்ளூம்பெர்க்) - ஆபத்தான வெள்ளம் மற்றும் கடும் வறட்சிக்குத் தயாராகும்படி சீன அரசாங்கம் தனது மக்களை எச்சரித்துள்ளது.. சீனாவின் தேசிய காலநிலை மையம் இந்த மாதம் கோடைகாலத்தில் பொதுவாக மோசமான வானிலை நிலவரங்களை கணித்துள்ளது. மேலும் நாடு வழக்கத்தை விட கடுமையான வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளும் என்று எச்சரித்தது.

சில பகுதிகளில் மழை இயல்பை விட 20-50 விழுக்காடு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்பது மாநிலங்கள் வழியாக ஓடும் மஞ்சள் நதி உட்பட சில பெரிய ஆறுகள் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தும். இந்த ஆண்டின் முதல் பாதியில் சராசரி வெப்பநிலை 1961 க்குப் பிறகு மிக உயர்ந்ததாகவும் சாதாரண அளவை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகம் என்றும் நிறுவனம் தனி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

"காலநிலை மாற்றம்" என்று ஒரு முறை கூட குறிப்பிடவில்லை. அச்சுறுத்தும் கணிப்புகள் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.