‘ஒலிம்பிக் ரத்தாகலாம்’

தோக்­கியோ: வரும் வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று தொடங்­க­வுள்ள ஒலிம்­பிக் விளை­யாட்­டு­கள் கடைசி நேரத்­தில் ரத்து செய்­யப்­ப­ட­லாம் எனப் போட்­டி­யின் ஏற்­பாட்­டுக் குழுத் தலை­வர் டொஷிரோ மூட்டோ கூறி­யுள்­ளார். அதி­க­மா­னோ­ரி­டையே கிருமி பரவி வரு­வ­தை­யொட்டி அவர் அவ்­வாறு சொன்­னார். எத்­தனை பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது என்­ப­தைக் கண்­கா­ணித்து தேவைப்­பட்­டால் ஏற்­பாட்­டா­ளர்­க­ளு­டன் கலந்து பேசப்­போ­வ­தா­கத் திரு மூட்டோ செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் குறிப்­பிட்­டார்.

வரும் நாட்­களில் எத்­தனை பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­படும் என்­ப­தைக் கணிக்­க­மு­டி­யாது, கூடு­த­லா­னோர் பாதிக்­கப்­பட்­டால் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என்று அவர் கூறி­னார்.

தேவைப்­பட்­டால் அதைப் பற்றி சிந்­திக்­க­லாம் என்று அவர் சொன்­னார். எனி­னும், விளையாட்டுகளை முன்னிட்டு ஆயி­ரக்­க­ணக்­கான விளை­யாட்­டா­ளர்­கள், அதி­கா­ரி­கள், செய்­தி­யா­ளர்­கள் ஆகியோர் ஜப்­பான் சென்­று­விட்­ட­னர். அத­னால் திரு மூட்டோ அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக அவ்­வாறு கூறி­யி­ருக்­க­லாம் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

பல சர்ச்­சை­க­ளுக்கு மத்­தி­யில் விளை­யாட்­டு­களை நடத்­த­வி­ருப்­பதை ஜப்­பா­னிய மற்­றும் ஒலிம்­பிக் அதி­கா­ரி­கள் இது­வரை தற்­காத்­துப் பேசி­யுள்­ள­னர். போட்­டி­யில் பங்­கேற்­க­வுள்ள விளை­யாட்­டா­ளர்­களில் 80 விழுக்­காட்­டி­ன­ருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!