தென்னாப்பிரிக்காவின் ஒலிம்பிக் சவால்

தோக்­கியோ: தென்­னாப்­பி­ரிக்­கா­வின் ஆண்­கள் காற்­பந்து அணி­யில் சிலர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­தால் ஜப்­பா­னுக்கு எதி­ரான அதன் ஆட்­டத்­தில் 11 விளை­யாட்­டா­ளர்­களை ஆட­வைக்க அணி சிர­மப்­ப­டக்­கூ­டும். ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் பங்­கேற்க ஜப்­பா­னுக்­குச் செல்­வ­தற்கு முன்­னரே தென்­னாப்­பி­ரிக்க அணி­யில் பல­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. இந்த சவாலை அணி எதிர்­கொள்­ளும் விதம், கிரு­மிப் பர­வல் சூழ­லில் வெற்­றி­க­ர­மாக ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களை நடத்­து­வ­தற்­கான அள­வு­கோ­லாக அமை­ய­லாம்.

அனைத்­து­ல­கக் காற்­பந்து கூட்­ட­மைப்­பின் விதி­மு­றை­க­ளின்­படி ஓர் ஆட்­டத்தை நடத்த இரண்டு அணி­க­ளி­ட­மும் குறைந்­தது 13 விளை­யாட்­டா­ளர்­கள் இருக்க வேண்­டும்.

கிரு­மிப் பர­வல் நில­வ­ரத்­தால் தனது அணி­யின் எந்­தெந்த விளை­யாட்­டா­ளர்­கள் ஆட்­டத்­தில் இடம்­பெ­று­வர் என்­பதை உறு­தி­யா­கச் சொல்­ல­மு­டி­யாது எனத் தென்­னாப்­பி­ரிக்­கப் பயிற்­று­விப்­பா­ளர் டேவிட் நொட்­டோ­வானே தெரி­வித்­துள்­ளார்.

அணி­யில் கிரு­மித்­தொற்று இடம்­பெற்­ற­தால் விதி­மு­றை­க­ளின்­படி பல முறை சோத­னை­கள் நடத்­தப்­பட்­டன. அத­னால் கிட்­டத்­தட்ட ஒரு வார­மா­கப் பயிற்­சி­களை மேற்­கொள்­ள­மு­டி­யா­மல் போனதை அவர் குறிப்­பிட்­டார்.

ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் பொது­வாக ரசி­கர்­கள் நன்கு அறிந்­துள்ள காற்பந்து வீரர்கள் அதிகம் இருக்­க­மாட்­டார்­கள்.

பங்­கேற்­கும் தேசிய அணி­க­ளின் 23 வய­துக்கு உட்­பட்ட வீரர்­கள்­தான் அதி­கம் இடம்­பெ­று­வர்.

அதோடு, உல­க­ள­வில் பொது­வாக சிறப்­பாக ஆடும் அணி­கள் ஒலிம்­பிக்­கி­லும் அவ்­வாறே செய்­யும் எனக் கூற­மு­டி­யாது. நைஜீ­ரியா, கெம­ரூன், மெக்­சிக்கோ போன்ற அணி­கள் தங்­கப் பதக்­கத்தை வென்­றி­ருக்­கின்­றன.

2016 போட்­டி­யில்­தான் பிரே­சில் காற்­பந்­தில் தனது முதல் ஒலிம்­பிக் தங்­கத்தை வென்­றது.

ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் மட்­டும்­தான் பிரிட்­ட­னுக்­கென ஒரு காற்­பந்து அணி பங்­கேற்­கும்.

உல­கக் காற்­பந்­தில் பிரிட்­ட­னில் உள்ள நான்கு பகு­தி­களுக்கும் தனி தேசிய அணி­கள் உள்­ளன.

இங்­கி­லாந்து, ஸ்காட்­லாந்து. வேல்ஸ், வட அயர்­லாந்து ஆகிய அணி­கள் பொது­வாக அனைத்­து­ல­கக் காற்­பந்து போட்­டி­களில் பங்­கேற்­கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!