முதன்முறையாக ஒலிம்பிக்கில் சாந்தி பெரேரா

2 mins read
9fe50c8d-3d04-4161-ac6c-b7c03c7836a4
ஒலிம்பிக் திடல்தடப் போட்டிகளில் சிங்கப்பூரின் சாந்தி பெரேரா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர்: ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் முதன்­மு­றை­யா­கப் பங்­கேற்க ஆயத்­த­மா­கி­வ­ரு­கி­றார் சிங்­கப்­பூர் ஓட்­டப் பந்­தய வீராங்­கனை வெரோ­னிக்கா சாந்தி ெபரேரா.

பெண்­கள் 100 மீட்­டர் ஓட்­டத்தை முடிக்க அவருடைய குறைந்த அளவு நேரம் 11.58 விநா­டி­கள்.

200 மீட்­டர் ஓட்­டத்தை முடிக்க அவருடைய குறைந்த அளவு நேரம் 23.60 விநா­டி­கள்.

இரண்­டும் இது­வரை முறி­ய­டிக்­கப்­ப­டாத தேசிய சாத­னை­கள்.

2013ஆம் ஆண்­டில் முதன்­மு­றை­யா­கப் பிர­ப­ல­மா­னார் பெரேரா. அப்­போது 17 வய­தா­க­வி­ருந்த அவர், 100 மீட்­டர் தூரத்தை 12 விநா­டி­களுக்­குள் ஓடிய முதல் சிங்­கப்­பூர் வீராங்­க­னை­யாக விளங்­கி­னார்.

அதற்­குப் பிறகு அவர் ஏற்­றத் தாழ்­வு­க­ளைச் சந்­தித்­தார்.

உதா­ர­ண­மாக, 2015ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் 200 மீட்­டர் ஓட்­டப் பிரி­வில் தங்­கம் வென்­றார்.

ஆனால் 2017ல் கோலா­லம்­பூ­ரில் நடை­பெற்ற தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­க­ளின் 200 மீட்­டர் ஓட்­டத்­தில் வெண்­க­லம் மட்­டுமே வென்­றார்.

அதற்கு சுமார் ஓராண்­டுக்­குப் பிறகு காய­முற்­றார்.

தங்­க­ளின் விளை­யாட்­டுப் பய­ணத்­தில் ஏற்­றத் தாழ்­வு­கள் இருக்­கும் என்­பதை ஏற்­றுக்­கொள்­வதே விளை­யாட்­டா­ளர்­க­ளுக்கு சவா­லான ஒன்று என்­பதை பெரேரா சுட்­டி­னார்.

அத­னால் தன்­னைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்டு என்ன நடந்­தா­லும் தனது விளை­யாட்­டுப் பய­ணத்தை அர­வ­ணைக்­கும் பக்­கு­வம் இருத்­தல் அவ­சி­யம் என்­றார் ெபரேரா.

ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களுக்­குத் தகு­தி­பெ­றத் தவ­றிய ஆகச் சிறந்த தேசிய வீரர்­கள் ஒரு­சி­லர் போட்­டி­யில் பங்­கேற்க அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

அந்க வகை­யில் தோக்­கியோ ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் பங்­கேற்­க­வி­ருக்­கி­றார் ெபரேரா. அவ்­வாறு 200 மீட்­டர் ஓட்­டப் பிரி­வில் பங்­கேற்­க­வுள்ள நான்கு போட்­டி­யா­ளர்­களில் ஒரு­வர் ெபரேரா.

ஒலிம்­பிக்­கில் திடல்­த­டப் போட்­டி­களில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­கும் ஒரே வீர­ரும் இவரே.

ஒலிம்­பிக்­கில் தனக்­கென ஒரு இலக்கை வைத்­துக்­கொள்­ள­வில்லை எனச் சொன்ன ெபரேரா, தனது பயிற்­று­விப்­பா­ளர் லூயிஸ் குன்­யா­விற்­குக் கீழ் தொடர்ந்து முன்­னேற்­றம் காண்­ப­தில் அக்­கறை காட்­டு­வ­தா­கக் கூறி­னார்.

குன்யா, 1988, 1992, 1996 ஒலிம்பிக் விளையாட்டுகளில் போர்ச்சுகலைப் பிரதிநிதித்தவர். சென்ற ஆண்டு ஜவனரி மாதம் முதல் அவர் பெரேராவின் பயிற்றுவிப்பாளர்.