தோக்கியோ ஒலிம்பிக்: ஆக இளைய, வயதான போட்டியாளர்கள்

தோக்கியோ ஒலிம்பிக்: ஆக இளைய, வயதான போட்டியாளர்கள்

1 mins read
93fa0c51-852d-4d7d-b91c-0c218c48063d
-
multi-img1 of 2

தோக்­கியோ: தமக்கு ஐந்து வய­தா­ன­போது மேசைப்­பந்து மட்­டை­யைக் கையில் பிடிக்­கத் தொடங்­கிய ஹெண்ட் ஸாஸா (இடது), அடுத்த ஏழே ஆண்­டு­களில் ஒலிம்­பிக் போட்­டி­களில் பங்­கேற்­கும் அள­விற்­குத் திற­மை­யான வீராங்­க­னை­யாக உரு­வெ­டுத்­துள்­ளார். உள்­நாட்டுப் போரால் சீரழிந்த சிரி­யா­வைச் சேர்ந்த 12 வயது ஸாஸாவே இந்த ஒலிம்­பிக்­கில் பங்­கேற்­கும் ஆக இளம் போட்­டி­யா­ளர்.

மாறாக, தமது 66வது வய­தில் ஏழா­வது முறை­யாக ஒலிம்­பிக்­கில் பங்­கேற்­கும் ஆஸ்­தி­ரே­லிய குதிரை­யேற்ற வீராங்­கனை மேரி ஹன்னா (வலது), இந்த ஒலிம்­பிக்­கின் ஆக வய­தான போட்­டி­யா­ள­ராக அறி­யப்­படு­கி­றார். ஒலிம்­பிக் வர­லாற்­றில் ஆக வய­தான 2வது போட்டி­யா­ள­ரும் இவரே. பிரிட்­ட­னின் லோர்னா ஜான்ஸ்­டன் தமது 70வது வய­தில் 1972ஆம் ஆண்டு நடந்த ஒலிம்­பிக் போட்டிகளில் பங்கேற்றார்.