துனீசிய வீரர் அதிர்ச்சி வெற்றி

தோக்கியோ: ஒலிம்பிக்கில் ஆண்கள் 400 மீட்டர் எதேச்சை பாணி நீச்சலில் தங்கம் வென்று பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் துனீசிய வீரர் அஹ்மெத் ஹஃப்னாவிய்.

தகு­திச் சுற்­றில் ஆக அதிக நேரம் எடுத்­துக்­கொண்­ட­வர் ஹஃப்னா­விய். நேற்­றைய போட்­டி­யில் அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் 43.36 விநா­டி­கள். தனது கனவு நன­வா­ன­தா­கச் சொன்ன 18 வயது ஹஃப்னா­விய், வெற்­றி­யைத் தன்­னால் நம்­ப­மு­டி­ய­வில்லை என்­றார். இந்த வெற்றி, வர­லாற்­றில் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் துனீசியா வென்­றி­ருக்­கும் ஐந்­தா­வது தங்­கப் பதக்­கம். நீச்­சல் போட்­டி­களில் அந்­நாடு மூன்று முறை ஒலிம்­பிக்­கில் தங்­கம் வென்­றுள்­ளது.

போட்­டி­யில் வெள்­ளிப்­ பதக்கத்தை வென்­றார் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஜேக் மெக்­ல­ஃப்­லின். வெண்­க­லப் பதக்­கத்தை வென்­றார் அமெ­ரிக்­கா­வின் கிய­ரன் ஸ்மித்.

துனீசி­யா­வின் முன்­னாள் தேசிய கூடைப்­பந்து வீர­ரின் மக­னான ஹஃப்னா­விய், 2018 இளை­யர் ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களின் 400 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­ச­ல் போட்டியில் நான்­கா­வ­தாக முடித்தார். 800 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் பிரி­வில் ஏழா­வ­தாக முடித்­தார்.

2024ஆம் ஆண்டு பிரெஞ்­சுத் தலை­ந­கர் பாரி­சில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்­பிக் விளை­யாட்­டு­க­ளில்­தான் முதன்­மு­றை­யா­கத் தங்­கம் வெல்­லும் இலக்­கைக் கொண்­டி­ருந்­தார். இப்­போது தோக்­கி­யோ­வில் தனது இலக்­கையே மிஞ்­சி­விட்­டார் ஹஃப்னா­விய்.

நாளை 800 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­ச­ல் போட்டிக்கான தகு­திச் சுற்று நடை­பெ­ற­வுள்­ளது. அதி­லும் பங்­கேற்­க­வுள்­ளார் ஹஃப்னா­விய்.

இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால் அதிலும் அவருக்குத் தங்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளது.

பெண்­கள் 4X100 மீட்­டர் எதேச்சை பாணி நீச்­சல் போட்­டியை 3 நிமி­டங்­கள் 29.69 விநா­டி­களில் முடித்து உல­கச் சாத­னையை முறி­ய­டித்து தங்­கத்­தைக் கைப்­பற்­றி­யது ஆஸ்­தி­ரே­லியா. கனடா வெள்­ளிப் பதக்­கத்தை வென்­றது. வெண்­கலத்தை வென்­றது அமெ­ரிக்கா.

ஆண்­கள் ஒற்­றை­யர் கலப்பு பாணி நீச்­ச­லில் அமெ­ரிக்­கா­வின் சேஸ் கலிஸ்ச் தங்­கம் வென்­றார். அந்­தப் போட்­டி­யில் வெள்­ளிப் பதக்­கத்தையும் வென்­ற­ார் அமெ­ரிக்­கா­வின் ஜே லித்­தர்­லண்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!