நேர்த்தியாக நீந்தி தங்கம் வென்ற ஜப்பானியர்

தோக்கியோ: இந்த ஒலிம்பிக் விளையாட்டுகளின் நீச்சல் போட்டிகளில் ஜப்பானுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்தார் யூயி ஒஹாஷி. 400 மீட்டர் பெண்கள் ஒற்றையர் கலப்பு நீச்சல் போட்டியை 4 நிமிடங்கள், 32.08 விநாடிகளில் முடித்தார் ஒஹாஷி.

போட்­டி­யில் நெஞ்சு நீச்­ச­லில் சிறப்­பா­கச் செய்­தார் ஒஹாஷி.

இந்­தப் போட்­டிக்கு முதல் நாளன்று ஆண்­கள் ஒற்­றை­யர் 400 மீட்­டர் கலப்பு பாணி நீச்­சல் போட்­டிக்­கான தகு­திச் சுற்று நடை­பெற்­றது. அதில் இடம்­பெற்ற ஜப்­பா­னின் டாயா செட்டோ இறு­திப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­றத் தவ­றி­னார். செட்டோ தங்­கம் வெல்­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஒஹா­ஷி­யின் வெற்றி ஜப்­பா­னின் அந்த ஏமாற்­றத்தை ஈடு­கட்­டி­யது. கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருப்­ப­தால் ஒஹா­ஷி­யின் வெற்­றி­யைக் கொண்­டாட அரங்­கில் ரசி­கர்­கள் இல்லை. ஆனால் அவ­ரின் சக போட்­டி­யா­ளர்­களும் ஜப்­பா­னிய அதி­கா­ரி­களும் ஒஹா­ஷி­யின் வெற்றியைக் கொண்­டா­டி­னர்.

போட்­டி­யில் அமெ­ரிக்­கா­வின் எம்மா வேயன்ட் வெள்­ளிப் பதக்­கம் வென்­றார். மற்­றோர் அமெ­ரிக்­கரான ஹேலி ஃபிலிக்­கிஞ்­சர் வெண்­க­லப் பதக்­கத்தை வென்­றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!