விம்­பிள்­டன் வெற்றியாளர் பார்டி முதல் சுற்றில் வெளியேறினார்

விம்­பிள்­டன் வெற்றியாளர் பார்டி முதல் சுற்றில் வெளியேறினார்

2 mins read

தோக்கியோ: பெண்கள் டென்னிஸ் உலத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை ஏஷ்லேய் பார்டி ஒலிம்பிக் போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார்.

சுமார் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் பார்டி விம்­பிள்­டன் பொது­வி­ருதை வென்­றார்.

ஆனால் நேற்றோ முதல் சுற்றில் ஸ்பெயினின் சாரா சொரிபெஸ் டோர்மோவிடம் 6-4, 6-3 என்ற செட் விகிதத்தில் தோல்வியுற்றார்.

ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் பார்டியால் சரியாக விளையாட முடியவில்லை.

பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் 48வது இடத்தில் உள்ள சொரிபெஸ் டோர்மோவை அவர்தான் வெல்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

தனது தோல்­வி­யைத் தொடர்ந்து பெரும் மன வருத்­தத்­திற்கு ஆளான பார்டி, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேச மறுத்­தார்.

இரண்டாம் சுற்றில் பிரான்சைச் சேர்ந்த ஃபியோனா ஃபெரோவைச் சந்திப்பார் சொரிபெஸ் டோர்மோ.

மற்­றொரு பெண்­கள் ஒற்­றை­யர் பிரிவு ஆட்­டத்­தில் ஜப்­பா­னின் நவோமி ஒசாக்கா சீனா­வின் செங் சாய்­சாயை 6-1, 6-4 எனும் செட் விகிதத்தில் வென்­றார்.

மன­ந­லப் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கி­ய­தால் பிரெஞ்சு பொது­வி­ரு­துப் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யே­றிக்­கொண்டு சிறிது காலம் ஓய்­வெ­டுத்­தார் ஒசாக்கா.

அதற்­குப் பிறகு இது­தான் அவர் விளை­யா­டிய முதல் ஆட்­டம்.

தங்­கம் வெல்­லக்­கூ­டிய வாய்ப்பு அதி­கம் உள்­ள­தா­கப் பல­ரால் கரு­தப்­படும் ஒசாக்கா, அடுத்த சுற்­றில் சுவிட்­சர்­லாந்­தின் விக்­டோ­ரியா கொலூ­பிச்­சைச் சந்­திப்­பார்.

பலருக்கு சிலர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தாலும் பெண்கள் டென்னிஸில் இப்போதெல்லாம் எதிர்பாரா முடிவுகள் அதிகம் வந்த வண்ணம் இருக்கின்றன.